புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Written By:

ஃபோக்ஸ்வேகன் என்றால் ஜெர்மானிய மொழியில் மக்களின் கார் என்று அர்த்தமாகிறது. கடந்த 80 ஆண்டுகளில் அந்த பெயருக்கு ஏற்றாற் போல் சரியான விலையில் சிறந்த கட்டுமானம் கொண்ட கார் மாடல்களை வழங்கி மக்களின் மனதில் தனி இடத்தை பதிய வைத்து இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் முன்னிலை பெறும் விதத்தில், தனது டிகுவான் பிரிமியம் எஸ்யூவியை அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது ஃபோக்ஸேவேகன். சவால் மிகுந்த பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டு இருக்கும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியை பெங்களூரில் இருந்து சிக்மகளூர் வரை டிரைவ்ஸ்பார்க் குழு டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த 2016ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டூரக் எஸ்யூவிக்கு அடுத்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இரண்டாவது ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மார்க்கெட்டில் மிக வலுவான மார்க்கெட்டை வைத்திருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களை புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி சமாளித்து சந்தையில் முக்கிய இடத்தை பெறுமா?

டிசைன்

டிசைன்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் வடிவமைப்பும், உடல்மொழியும் இது ஒரு ஜெர்மானிய கைவண்ணம் என்பதை பார்த்தவுடனே கண்டு கொள்ள முடிகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பானட் வடிவமைப்பும், அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் கோடுகளும் மிக சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருக்கிறது. ஹெட்லைட் மற்றும் முகப்பு க்ரில் ஒரே அமைப்பில் மிகச் சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது.எல்இடி ஹெட்லைட்டுகள், அதனுடன் இணைந்த பகல்நேர விளக்குகள், எல்இடி இண்டிகேட்டர்கள் என அசத்தலாக இருக்கிறது.

வலிமையான பம்பர் மற்றும் பெரிய அளவிலான ஏர் இன்டேக் ஆகியவையும், காரின் முகப்புக்கு கம்பீரத்தை பெற்று தருகின்றன. மொத்தத்தில் முகப்பு டிசைன் அருமையாகவே இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பக்கவாட்டில் டெயில் லைட்டில் துவங்கும் ஷோல்டர் லைன் முன்புற வீல் ஆர்ச்சில் வந்து முட்டி நிற்கிறது. இந்த ஷோல்டர் லைன் பக்கவாட்டிலும் கம்பீரத்தை பெற்று தருகிறது.

அத்துடன் வலிமையான வீல் ஆர்ச்சுகள், பாடி கிளாடிங், 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஹேன்ஹூக் டயர்கள் ஆகியவை எஸ்யூவி கார்களுக்குரிய முறுக்கான தோற்றத்தை அளிக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின்புறத்தில் கூரை முடிவில் ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புற டிசைனுக்கு முத்தாய்ப்பான விஷயம், மிக சிறப்பான எல்இடி டெயில் லைட்டுகளும், வலுவான பம்பர் அமைப்பும்தான்.

மொத்தத்தில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் வடிவமைப்பு, வடிவம் போன்ற அனைத்தும் மிகச் சரியான விகிதத்தில் இருப்பதால், கவர்ச்சி மிகுந்ததாகவே கூறலாம்.

இன்டீரியர்

இன்டீரியர்

வெளிப்புறம் போன்றே, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் உள்ளே நுழைந்ததும், மிக சிறப்பான டிசைன் அம்சங்களை பெற்றிருந்ததை கூற வேண்டும்.

மிக நேர்த்தியான டேஷ்போர்டு அமைப்பு, அதில் ஓட்டுனர் இயக்குவதற்கான லாவகமாக கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டன்கள் என்பவை சிறப்பு. அதேநேரத்தில், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சற்றே டல்லடிக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுட்பமாக யோசித்து, ஆராய்ந்து பட்டன்களை அமைத்துள்ளனர். இந்த எஸ்யூவியில் 12.3 இன்ச் ஆக்டிவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்கிறது. 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டத்தின் ஒலி தரம் நன்றாக இருந்தது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இருக்கிறது. குளிர்ப்பதன வசதி கொண்ட க்ளவ் பாக்ஸ் உள்ளது. வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை வைப்பதற்கு அதிக ஸ்டோரேஜ் இடவசதிகளும் அதிகம் இருக்கின்றன.

இந்த எஸ்யூவியில் இருக்கும் கண்ணாடி கூரை மிகப்பெரியதாக இருக்கிறது. இதனால், அதிக இடவசதி இருப்பது போன்ற ஒரு மாயை ஏற்படுத்துகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

முன் இருக்கை மிகச் சிறப்பான இடவசதி மற்றும் ஹெட்ரூம் இடவசதியை பெற்றிருக்கிறது. இதன் டேஷ்போர்டு மற்றும் விண்ட்ஷீல்டு மற்றும் ஏ பில்லர்கள் அமைப்பு சாலையை மிக தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பின் இருக்கையில் 3 பேர் அமர்ந்து செல்ல முடியும். அதேசமயத்தில் சற்றே பருமனானவர்கள் அமர்ந்தால், சற்று நெருக்கடியாக இருக்கும். ஆனால், போட்டி மாடல்கள் 7 சீட்டராக இருப்பதுடன், இடவசதியும் சிறப்பாக இருக்கின்றன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த எஸ்யூவியில் 615 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. இந்த எஸ்யூவியின் பின்புற இருக்கையை மடக்கி வைத்தால் 1,665 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியை பெற முடியும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டிகுவான் எஸ்யூவியின் பின்புற பம்பரின் கீழ் பகுதியில் பூட் ரூமை திறப்பதற்கான சென்சார் இருக்கிறது. காலை சென்சாருக்கு நேராக வைத்து லேசாக அசைத்தால் பூட் ரூம் திறந்து கொள்ளும்.

அதேபோன்று, பட்டன் மூலமாக அல்லது காரைவிட்டு விலகிச் செல்லும்போது பூட் ரூம் தானாக மூடிக் கொள்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஞ்சின் ஆரம்ப நிலையில் சற்று டர்போ லேக் இருக்கிறது. மேலும், இதன் எஞ்சின் சக்தியை சீராகவே வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில், அதிகபட்சமான 340 என்எம் டார்க் திறனை 1,750 ஆர்பிஎம் ரேஞ்சிலேயே கிடைக்கிறது. இந்த எஸ்யூவியை நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு மிகச் சிறப்பாக இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஞ்சினை 2,000 ஆர்பிஎம்.,மில் வைத்து மணிக்கு 120 கிமீ வேகத்தில் செலுத்தியபோது க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை ஆன் செய்து விட்டோம்.

டாப் கியரில் எந்த திக்கு திணறாமல் செல்கிறது. மணிக்கு 200 கிமீ வேகத்தை எளிதாக எட்டும் திறனை பார்க்க முடிகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அதேபோன்று, ஓட்டுதல் தரத்திலும் மிகச் சிறப்பான எஸ்யூவி மாடலாக கூறலாம். துல்லியமான ஸ்டீயரிங் சிஸ்டம், சப்தம் மிக குறைவான கேபின், மென்மையான கியர்பாக்ஸ் போன்றவை இந்த காரின் முக்கிய விஷயங்கள். சஸ்பென்ஷனும் மிகச்சிறப்பாக இருப்பதால், அதிக நிலைத்தன்மையுடன் கார் பயணிக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

பாடி ரோல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேடு பள்ளங்களையும் லாவகமாக கையாள்கிறது ஃபோக்ஸ்வேகன் டிகுவான். மொத்தத்தில் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கியது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

அடுத்து ஆஃப்ரோடில் வைத்து டிகுவான் எஸ்யூவியை சோதனை செய்தோம். இந்த எஸ்யூவியில் இருக்கும் 4Motion ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் எந்தவொரு சாலைக்கும் ஏற்றவாறு காரின் இயக்கத்தை மாற்றிக் கொள்கிறது. மேலும், அதிகபட்சமான தரைப்பிடிப்பை வழங்குகிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 4 விதமான ஆஃப்ரோடு மோடுகள் இருக்கின்றன. பனித்தரை, சாதாரண சாலைகள், ஆஃப்ரோடு மற்றும் ஓட்டுனருக்கு விருப்பமான தேர்வுகளில் மாற்றிக்கொள்ளக்கூடிய ஆஃப்ரோடு மோடு என்ற இந்த 4 டிரைவிங் மோடுகள் ஓட்டுனருக்கு பேருதவியாக இருக்கும். கியர் லிவர் பின்புறம் இருக்கும் டயல் மூலமாக விருப்பமான மோடுக்கு மாற்றலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள் உள்ளன. பஞ்சரானால் தானாக சரிசெய்து கொள்ளும் டயர்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்டவை இருக்கின்றன. ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் போன்ற வசதிகளும் உள்ளன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

யூரோ என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவியில் ரீஆக்டிவ் பானட் என்ற பாதுகாப்பு வசதி இருக்கிறது. காரின் முன்புறம் விசேஷ பானட் அமைப்பு இருக்கிறது.

பாதசாரிகள் மீது கார் மோதும் பட்சத்தில், பானட்டின் மேல் மூடி சற்று மேலே தூக்கி பாதசாரிக்கு பலத்த காயம் ஏற்படுவதை தவிர்க்கும்.

 தீர்ப்பு

தீர்ப்பு

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் போன்ற ஜாம்பவான்களை ஒரு கை பார்க்க வந்துள்ளது புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான். திடமான கட்டுமானம், அதிக வசதிகள், சிறந்த பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இருப்பினும், போட்டியாளர்களைவிட விலை மிக அதிகமாக இருப்பதே இதற்கு பாதகமான விஷயமாக கூறலாம்.

 எடிட்டர் கருத்து

எடிட்டர் கருத்து

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கும் ஒரு கார் பொருத்தமானதாக இருக்கும். அந்த வகையில், மிகச் சிறந்த டிசைன், பாதுகாப்பு அம்சங்கள், செயல்திறன்மிக்க எஸ்யூவியை விரும்புவோருக்கு ஃபோக்ஸ்வேகன் டிகுவான் சிறந்த சாய்ஸாக அமையும்.

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?

டிகுவான் என்பது டீ-க்வான் என்ற ஜெர்மானிய வார்த்தைகளின் பிணைப்பு. அதாவது, புலி மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு வகை ஊர்வன விலங்கின் பெயர்களை ஒருங்கிணைத்து இந்த பெயரை வைத்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.

English summary
It takes an efficient and sturdy car to survive in the crowded Indian Premium Compact SUV market. Throw in well-established rivals from Toyota and Ford, and you are left wondering - does the Volkswagen Tiguan have what it takes to unseat its competitors?
Story first published: Monday, June 19, 2017, 17:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark