இளசுகளின் மனசை கொள்ளையடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ!

ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனம் இந்தியாவில் பிரிமியம் கார் விற்பனையில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய போலோ, அமியோ, வென்டோ, ஜெட்டா, பாசட் ஆகிய கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்படை பெற்று நல்ல விற்பனை வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

குறிப்பாக ஃபோக்ஸ்வாகன் வென்டோ என்ற கார் என்ட்ரி லெவல் செடான் கார் மார்கெட்டில் பெரும் புரட்சியே செய்ததெனச் சொல்லலாம். 2010ல் அறிமுகமான இந்த கார் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று 11 ஆண்டுகள் கொடி கட்டி பறந்தது. இந்த காரை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் நிறுத்தியது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்நிலையில் ஃபோக்ஸ்வாகன் வென்டோ காரின் இடத்தை நிரப்ப தற்போது அந்த நிறுவனம் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் என்ற ஒரு புதிய மிட்- சைஸ் செடான் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பல பவர்ஃபுல் அம்சங்களுடன் இந்த கார் அறிமுகாகியுள்ளது. இந்த கார் வென்டோவின் இடத்தை நிரப்புமா? இன்றைய வாடிக்கையாளர்கள் இந்த காரை விரும்புவார்களா? இப்படியான பல கேள்விகளுடன் நாங்கள் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் காரை ஓட்டிப்பார்த்தோம் அதன் ரிவியூவை இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

டிசைன் மற்றும் ஸ்டைல்

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் கார்களின் டிசைன் மற்றும் ஸ்டைலில் தனித்துவமான டிசைன் மொழியைக் கொண்டிருக்கும். இந்த விர்டுஸ் காரின் டிசைனிலும் அதையே பின்பற்றியுள்ளனர். ஃபோக்ஸ்வாகன் குடும்ப கார்களின் டிசைன் மொழியில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த காரிலும் உள்ளது. தூரத்திலிருந்து பார்த்தாலே இது ஃபோக்ஸ்வாகன் கார்தான் எனக் கண்டுபிடிக்கும் அளவில் இதன் டிசைன் இருக்கிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த ரிவியூவிற்காக நாம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கூடிய டைனமிக் லைன் வேரியண்ட் காரையும், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் கூடிய பெர்ஃபாமென்ஸ் லைன் வேரியண்ட் காரையும் பயன்படுத்தினோம். இரண்டு கார்களும் டிசைனை பொருத்தவரை ஒரே மாதிரியான டிசைன் மொழியில் உள்ளது. இதில் பெர்பாமென்ஸ் லைனில் உள்ள GT பேட்ஜ் மற்றும் ஸ்போர்ட்டியர் டிசைன் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

காரின் முன்பக்கத்தைப் பொறுத்தவரை ஃபோக்ஸ்வாகன் பேட்ஜ் உடன் கூடிய ஸ்போர்ட்டி கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஃபோக்ஸ்வாகன் லோகோ கிரில்லை விட பெரியதாக இருக்கிறது. கிரில்லில் கருப்பு நிற பட்டை மேல் கீழாக உள்ள இரண்டு க்ரோம் பட்டைகளுக்கு இடையே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த க்ரோம் பட்டைகள் இரு பக்கமும் ஹெட்லைட் உடன் இணைந்து அதற்குள்ளும் செல்கிறது. ஹெட்லைட் உள்ளே செல்லும் இந்த டிசைன் ஸ்மோக் விளக்குகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

கிரில் மற்றும் ஹெட்லைட்கள் சிறிதாகக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பம்பர் பெரியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பம்பர் டிசைன் பார்ப்பவர்களை கிரிலின் கீழ்ப் பகுதியில் பார்வையைக் கொண்டு போகும் வகையில் அமைத்துள்ளது. கிரில் மற்றும் பம்பர் தனித்தனியாக இல்லாமல் மொத்தமாக ஒரே டிசைனில் இருப்பதைப் போலத் தோற்றம் அளிக்கிறது. பெர்ஃபாமென்ஸ் லைன் வேரியண்டில் GT பேட்ஜ் கிரில், சைடு ஃபென்டர், பூட் லிட் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. பம்பரில் ஃபாக் லைட் பொருத்தப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் பக்கவாட்டு பகுதியைப் பற்றிப் பார்க்கும் போது இது காருக்கு ஒரு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது. முழுவதுமாக கருப்பு நிறத்தில் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ORVM-வும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் டர்னிங் சிக்னல் லைட்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் எல்லாம் ஃபெர்பாமென்ஸ் லைன் வேரியண்டில் மட்டுமே உள்ளது

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் காருக்கு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது. இந்த கருப்பு நிறங்கள் மற்ற கலர் ஆப்ஷன்களின் கான்ட்ராஸ்ட் கலர் லுக்கை கொடுக்கிறது. இதன் காரணமாகவே இது ஸ்போர்ட்டி லுக்கை காருக்கு கொடுக்கிறது. இந்த கான்டராஸ் கலர் இல்லை என்றால் அது பிரிமியம் லுக்கை கொடுத்திருக்கும்

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் பின்பக்கத்தைப் பொறுத்தவரை கிளாஸி லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பின் பக்க விளக்குகள் ஸ்பிலிட் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூட் லிட்டில் லிப் ஸ்பாய்லர் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் VW பேட்ஜ் கருப்பு நிற பேக்கிரவுண்டில் ஸ்டைலான லுக்குடன் இருக்கிறது. பூட் லிட்டின் கீழ்ப் பகுதியில் விர்டுஸ் பேட்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. GT வேரியண்டில் அதே பேட்ஜூம் அமைந்துள்ளது. மொத்தத்தில் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் காரில் டிசைன் யூத்ஃபுல்லாக அமைத்துள்ளது. இளைய தலைமுறைகளைக் கவரும் வகையில் இந்த காரை டிசைன் செய்துள்ளனர்.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

உட்கட்டமைப்பு

விர்டூஸ் காரின் வெளிப்புறத்தோற்றம் யூத்ஃபுல் லுக்கில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். அப்பொழுது உட்புற தோற்றமும் நல்ல இட வசதிகளுடன் எலகன்ட் லுக்கில் யூத்ஃபுல்லாக இருக்க வேண்டும் என நினைப்பது சரியான விஷயம் அதே போலவே இந்த காரின் உட்புறமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

உட்புறத்தில் டூயல் டோன் இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது. யூத்ஃபுல் என்றாலே டேஷ்போர்டின் டிசைனும் அமைந்துள்ளது. இது இதுவும் இளசுகளின் மனசைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே சற்று வயதானவர்களுக்கு இந்த டிசைன் பிடிக்குமா என்பது சந்தேகம் தான்.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் ஏசி வெண்ட், ஸ்கிரீன், டோர் பேனல் என எல்லாம் ஒரே கலர் தீமில் அமைக்கப்பட்டுள்ளது. டேஷ் போர்டில் மேல் பகுதி மேட் பிளாக் நிறத்திலும் கீழ்ப் பகுதி பேட்ஜ் நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது காரின் இன்டிரியர் முழுவதும் இதே கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் டிரைவர் சீட்டை பொறுத்தவரை ஸ்டீயரிங் லெதர் கிளாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் எலகண்ட் லுக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங் கண்ட்ரோல்கள் பிரிமியம் லுக்கை கொடுக்கிறது. ஸ்டியரிங் வீலுக்கு பின்னால் 8 இன்ச் காக்பிட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்கச் சிறப்பாக மட்டுமல்ல ஏராளமான தகவல்களையும் கொண்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

டேஷ்போர்டின் மையப்பகுதியைப் பொறுத்தவரை 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயிண்மெண்ட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சப்ஃபோர்ட் செய்கிறது. இதில் கனெக்ட்டெட் கார் தொழிற்நுட்பம் உள்ளது. இதனால் நீங்கள் காரில் இருக்கும் போது உங்கள் ஸ்மார்ட் போன் எப்பொழுதும் காருடன் கனெக்ட்டிலேயே இருக்கும்.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

டச் ஸ்கிரீன் இன்போடெயிண்மெண்டை பொறுத்தவரை ஸ்மூத்தாகவும், வேகமாகவும் இருக்கிறது. இந்த இன்போடெயிண்மெண்டிற்கு கீழே சென்டர் ஏசி வெண்ட் அதற்குக் கீழே ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோலுக்கான கண்ட்ரோல்கள் உள்ளன. இது பயனர்களுக்கு பிரியமியர் எக்ஸ்பிரியன்ஸை கொடுக்கிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

அதே போலவே சென்டர் கண்சோலும் பிரிமியம் ஃபீலை வழங்குகிறது. கியர் லிவர் லெதர் பூட்டுடன் இருக்கிறது. கியர் லிவரை சுற்றி பியானோ கருப்பு நிறத்தில் சீட் அட்ஜெஸ்ட்மெண்ட்களுக்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கியர் லிவர்அருகில் உங்கள் ஸ்மார்ட் போன்களை வைக்கும் இடமும் அதுவே வயர்லெஸ் சார்ஜராகவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன் அல்லது மற்ற விஷயங்களை சார்ஜ் செய்ய USB Type-C போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் இரண்டு கப் ஹோல்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

மேலே IRVM அருகில் பானாரோமிக் சன்ரூஃப்பிற்கான கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பயன்படுத்த எளிதாக இருக்கிறது. ரூஃப் பகுதி பேட்ஜ் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது இண்டிரியருக்கு பிரிமியம் டச்சை வழங்குகிறது. உட்புறம் முழுவதும் கருப்பு லெதரில் தையல்கள் காண்ட்ரேஸ்ட் நிறமான சிறப்பு நிற நூலை கொண்டு தைக்கப்பட்டுள்ளது. அதனால் உட்கட்டமைப்பு ஸ்போர்ட்டி லுக்கை வழங்குகிறது. மொத்தத்தில் உட்புறம் பெரும்பாலும் பிரிமியம் மற்றும் கிளாஸி லுக்கை தருகிறது. வெளிப்புறத்தைப் போல ஸ்போர்ட்டி லுக் உட்புறத்தில் கிடைக்கவில்லை.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

கம்ஃபோர்ட் மற்றும் பூட் ஸ்பேஸ்

காரில் செல்லும் நபர்களுக்கு கம்ஃபோர்ட்டை கொடுப்பதில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் எப்பொழுதும் ஜொலிக்கும். அந்த வகையில் இந்த விர்டூஸ் காரும் நிறைய கம்ஃபோர்ட்டான வசதிகளை வழங்குகிறது. இந்த காரில் உள்ள ஏசி வென்ட்கள் கம்ஃபோர்ட் லெவலை அதிகரிக்கிறது. நீண்ட தூரம் பயணித்தாலும் பயணிகளுக்கு அலுப்பு தெரியாமல் இருக்கிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த கார்களின் சீட்களே நல்ல கம்ஃபோர்டாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற சீட்டும் நல்ல இட வசதியுடன் சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் பயணம் செய்த போது அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் செலவிட்ட நேரம் மிகவும் திருப்பதிகரமாக அமைந்திருந்தது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் காரின் வீல் பேஸை பொருத்தவரை 2651 மிமீ அளவில்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட் காரில் இதுவே மிகப்பெரிய வீல்பேஸ், இதே அளவிலான வீல் பேஸ் ஸ்கோடா ஸ்லாவியா காரில் மட்டுமே உள்ளது என்பது கூடுதல் தகவல்

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

அதைபோல பயணிகள்கால் வைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள லெக்ரூம் 1752 மிமீ அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் இதே செக்மெண்டில் அதிகமான இடமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல பின்பக்க ஏசி வெண்ட் அருகில் இரண்டு Type-C போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பின்புறம் பேர் மட்டுமே பயணித்தால் நடுவே ஹேண்ட் ரெஸ்ட்டை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

மேலும் இந்த காரில் டேஷ் போர்டில் தாராளமான வசதியுடன் ஸ்டோரேஜ் செய்யும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல டிரைவர் பகுதியிலும் சிறிய சிறிய பொருட்களை வைக்க சிறிய ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல ஆர்ம் ரெஸ்ட் பகுதியிலும், டோரிலும், சீட்டின் பின்பக்கத்திலும் பாக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த ஃபோக்ஸ்வாகன் விர்டூஸ் காரின் பூட் ஸ்பேஸை பொருத்தவரை மொத்தம் 521 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. அது இந்த செக்மெண்டிலேயே அதிகமான இடமாக உள்ளது. அதில் உங்களுக்கு தேவையான எல்லா லக்கேஜ்களையும் வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் பின் பக்க சீட்டையும் மடித்து அதிக இட வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். மொத்தத்தில் நல்ல சொகுசு மற்றும் கம்ஃபோர்ட் வசதிகளுடனும், இருக்கிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இன்ஜின்

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் வாகனங்களுக்கான இன்ஜின் திறனை பற்றி கேட்க வேண்டியதே இல்லை. இந்நிறுவனத்தின் பல கார்கள் சிறப்பான டிரைவிங் எக்ஸ்பிரியன்ஸை வழங்குகிறது. அதே போல இந்த காரும் சிறப்பான அனுபவத்தை வழங்குகிறதா என்பதை பார்க்க இந்த காரை நாங்கள் ஓட்டியும் பார்த்தோம்.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் டைனமிக் லைன் வேரியண்ட் 1.0 லிட்டர் இன்ஜின் உடன் வருகிறது. இதே இன்ஜின் தான் ஸ்கோடா குஷாக், ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வாகன் டைகுன் ஆகிய கார்களிலும் இருக்கிறது. இதில் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 113 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கிரயர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கண்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இதை ஓட்டும் போது 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால் சற்று சத்தம் இந்த காரிலிருந்து வருகிறது. அதே நேரத்தில் ஆக்ஸிலரேஷன் லீனியராக இருக்கிறது. அதுவும் டர்போ இன்ஜின் என்பதால் இன் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. ஆனால் பெரிய இதைவிட பவர்புஃல் காரை ஓட்டியவர்களுக்கு இந்த கார் கொஞ்சம் போர் தான்.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் பெர்ஃபாமென்ஸ் வேரியண்டை பொறுத்தவரை 1.5 லிட்டர் TSI EVO இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 4 சிலிண்டர் டர்போன இன்ஜினாக வருகிறது. இது 148 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ்களுடன் விற்பனைக்கு வருகிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இதில் டாப் மாடல் காரை வாங்கினால் அதில் இன்ஜின் சத்தம் சற்று அதிகமாக இருக்கும். இந்த இன்ஜின் டிராபிக்கான இடங்களில் காரை நிறுத்தி நிறுத்தி ஓட்ட வசதியாக இருக்கிறது. ஆனால் DSG கியர் பாக்ஸில் அப்படி அல்ல அது டிராபிக் இல்லாத நேராடுகளிலும் திருப்பகளிலும் செல்லவே சிறப்பாக இருக்கிறது. மிக சிறப்பாக கியர் மாறுகிறது. 7 ஸ்பீடு DSG கியர் பாக்ஸ் 1.5 லிட்டர் இன்ஜினிற்கு கச்சிதமாக பொருந்துகிறது. டிரைவ் மோடில் இலகுவாக கியர் மாறுகிறது. அதே நேரம் ஸ்போர்ட் மோடில் மிக வேகமாக கியர் மாறுகிறது. இதில் மேனுவல் மோடுஅதில் கியர் ஸிஃப்டிங் பேடலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் காரின் சஸ்பெண்ஷனை பொருத்தவரை அது கொஞ்சம் ஸ்டிப்பாக இருக்கிறது. குழிகளில் செல்லும் போது கொஞ்சம் பாடி ரோல் ஆகிறது. அது இந்த காரில் உள்ள ஒரு நெகட்டிவ்வான விஷயம் என்றே கருதலாம்.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

இந்த காரின் ஸ்டியரிங் வீல் குறைவான வேகத்தில் செல்லும் போது இலகுவாக இருக்கிறது. அதனால் டிராபிக்களில் சுலபமாக கார்களை ஓட்டி செல்ல முடியும். வேகம் கூட கூட ஸ்டியரிங்கும் மெது மெதுவாக இருக்கமாகிறது. இதன் 1.5 லிட்டர் இன்ஜின் எல்லா தருணங்களையும் சுலமாக கையாள்கிறது. எந்த இடத்திலும் சிரமப்பட்வில்லை. இதில் சிலிண்டர் டீ ஆக்டிவேஷன் தொழிற்நுட்பம் இருக்கிறது. அதை பயன்படுத்தி நாம் தேவையில்லாத நேரம் மொத்தம் உள்ள 4 சிலிண்டரில் 2 சிலிண்டரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

பாதுகாப்பு மற்றும் முக்கிய அம்சங்கள்

ஃபோக்ஸ்வாகன் விர்டூஸ் கார் பாதுகாப்பான காராக வந்துள்ளது. இந்த கார் சிறப்பான பில்டு குவாலிட்டியுடன் ஆக்டிவ் மற்றும் பாசிவ் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்கிறது. பாதுகாப்பு அம்சத்தில் விர்டூஸ் கார் யாரையும் ஏமாற்றவில்லை இந்த கோில் மொத்தம் 6 ஏர் பேக்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், எலெக்ட்ரிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மல்டி கோலிஷன் பிரேக், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் சிஸ்டம், டயர் பிரஷ் மானிட்டரின் சிஸ்டம், ஏபிஎஸ் மறஅம் இபிடி, டிராக்ஷன் கண்ட்ரோல், ஐஎஸ்ஓபிக்ஸ் சீட்ஸ், பார்க் டிஸ்டென்ஸ் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

அதே போல இதில் ஸ்டிரிங் மவுண்ட் கண்ட்ரோல், வெண்டிலேட்டட் முன்பக்க சீட்கள், 10.1 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், கீ லெஸ் எண்ட்ரி, 8இன்ச் கலர்ஃபுல் டிஜிட்டல் காக்பிட், Type-C சார்ஜிங் போர்ட்கள் ஆகியன இந்த காரின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் கார் மொத்தம் 2 வேரியண்ட் 6 கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் லைன் ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளது. அதே போல வைல்டு செர்ரி ரெட், குர்குமா மஞ்சள், ரைசிங் ப்ளூ மெட்டாலிக், ரெஃப்லெக்ஸ் சில்வர், கார்பன் ஸ்டீல் க்ரே, கேன்டி ஒயிட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

இளசுகளின் மனசை கொள்ளயடிக்கும் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் ரிவியூ

மொத்தத்தில் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் கார் எலகண்ட், அக்ரசிவ் மற்றும் காம் லுக்கில் இருக்கிறது. இளைஞர்களை கவரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே நிறுத்திய வென்டோ காரின் இடத்தை நிரப்புவதற்கு இந்த விர்டுஸ் கார் கட்டாயம் பிடிக்கும் என தெரிகிறது. இந்த செடான் கார் செக்மெண்டில் சிறப்பான அம்சங்களுடன் பிரிமியம் மற்றும் யூத்ஃபுல் காராக இந்த காரே பெரும் வெற்றியை பெரும் என்றே எதிர்பார்க்கலாம்

Most Read Articles

English summary
Volkswagen Virtus car review design performance features and other details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X