ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ Vs டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் Vs ஃபியட் அவென்ச்சுரா: சிறப்பம்சங்கள் ஒப்பீடு!

By Saravana

காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கும், பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கும் இடையில் ஓர் புதிய செக்மென்ட் முளைத்துள்ளது. அதுதான் ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர்! ஏற்கனவே உள்ள ஹேட்ச்பேக் கார்களில் சிறிய மாறுதல்கள் செய்தும், சில, பல கூடுதல் ஆக்சஸெரீஸ்களை பொருத்தியும் ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் மாடல்களாக முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

கார்களின் டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் எஸ்யூவிகளின் ஆஃப்ரோடு அம்சங்கள் என இரண்டையும் ஒருங்கே வழங்குவதுதான் கிராஸ்ஓவர் கார் மாடல்கள். ஆனால், ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் மாடல்கள் ஓர் முழுமையான கிராஸ்ஓவர் மாடலாக குறிப்பிட இயலாது. இவற்றை Pseudo Crossover என்று அழைக்கின்றனர். சாகச பயண விரும்பிகள் மற்றும் பட்ஜெட் விலையில் கிராஸ்ஓவர் மாடல்களை விரும்புபவர்களை குறிவைத்து இந்த செக்மென்ட்டில் கார்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன.

ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ, டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் ஆகிய மாடல்களின் வரிசையில் ஃபியட் அவென்ச்சுராவும் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ளதால் போட்டி அதிகமாகியிருக்கிறது. மேலும், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் மாடலுக்கு இதுவரை 5,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக வெளியான தகவலால், இந்த மார்க்கெட்டை கண்டும் காணாமல் இருந்த நிறுவனங்கள், தற்போது கவனத்தை திசை திருப்பியுள்ளன.

இதேபோன்று, ஃபியட் அவென்ச்சுராவுக்கும் 500க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு எலைட் ஐ20 அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் தற்போது தீவிர சோதனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் மூன்று காம்பேக்ட் கிராஸ்ஓவர் மாடல்களில் எது சிறந்தது என்பதை ஸ்லைடரில் காணலாம்.


ஒப்பீடு

ஒப்பீடு

இந்த செய்தி சிறப்பம்சங்களின் அடிப்படையில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க.

வடிவம்

வடிவம்

நீளம்

இந்த செக்மென்ட்டில் மிக நீளமான மாடல் ஃபியட் அவென்ச்சுரா. இந்த கார் 3,989மிமீ நீளம் கொண்டது. இதைத்தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் போலோ கார் 3,987மிமீ நீளம் கொண்டதாகவும், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் 3,895மிமீ நீளம் கொண்டதாகவும் இருக்கிறது.

அகலம்

அகலத்தில் 1,735மிமீ கொண்ட எட்டியோஸ் கிராஸ் முன்னிலை பெறுகிறது. ஃபியட் அவென்ச்சுரா 1,706மிமீ அகலமும், ஃபோக்ஸ்வேகன் 1,698மிமீ அகலமும் கொண்டது.

வீல் பேஸ்

உட்புற வசதிக்கு முக்கியத்துவம் தரும் வீல் பேஸ் நீளத்தில், இந்த செக்மென்ட்டில் சிறப்பான வீல்பேஸ் கொண்ட மாடல் ஃபியட் அவென்ச்சுரா. அவென்ச்சுரா 2,510மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும், ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ 2,456மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும், டொயோட்டோ எட்டியோஸ் கிராஸ் 2,460மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

ஹேட்ச்பேக் மாடல்களிலும் விற்பனையாகும் நிலையில், இந்த காம்பேக்ட் கிராஸ்ஓவர்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் காருக்கும், தரைக்கும் இடையிலான இடைவெளி முக்கியத்துவம் பெறுகிறது. ஃபியட் அவென்ச்சுரா அதிகபட்சமாக 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. எட்டியோஸ் கிராஸ் 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கெண்டதாகவும், கிராஸ்போலோ கார் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. கிராஸ்போலோவில் 89 பிஎச்பி பவரையும், 230என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் கிராஸ்ஓவர் மாடல் இரண்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், ஒரு டீசல் மாடலிலும் கிடைக்கிறது. எட்டியோஸ் கிராஸ் கிராஸ்ஓவரில் 79 பிஎச்பி பவரையும், 104என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 89 பிஎச்பி பவரையும், 132என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் இருக்கின்றன. டீசல் மாடலில் 67 பிஎச்பி பவரையும், 170என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்திலும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபியட் அவென்ச்சுரா

ஃபியட் அவென்ச்சுராவில் 89 பிஎச்பி பவரையும், 115என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 92 பிஎச்பி பவரையும், 209என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

டொயோட்டா எட்டியோஸ் கிராஸ்

எட்டியோஸ் கிராஸின் 1.2 லி பெட்ரோல் மாடல் 17.71 கிமீ/லி மைலேஜையும், 1.5 லி பெட்ரோல் மாடல் 16.78 கிமீ/லி மைலேஜையும், 1.4 லி டீசல் மாடல் 23.59 கிமீ/லி மைலேஜையும் தருகிறது. தற்போது இந்த செக்மென்ட்டின் விற்பனையாகும் மாடல்களில் அதிக மைலேஜ் தருவது எட்டியோஸ் கிராஸ் மாடல்தான்.

ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ

டீசல் மாடலில் மட்டுமே விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ லிட்டருக்கு 20.14 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபியட் அவென்ச்சுரா

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.5 மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ ரூ.7.75 லட்சம் விலையிலும், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் ரூ.5.76 லட்சம் முதல் ரூ.7.40 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஃபியட் அவென்ச்சுரா ரூ. 5.99 லட்சம் முதல் ரூ. 8.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

சிறப்பான பாதுகாப்பு வசதிகள், கட்டுமானத் தரம் போன்றவற்றில் நிறைவான காராக இருக்கும் ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ போட்டியாளர்கள் அளவுக்கு கிராஸ்ஓவர் மாடல் தோற்றத்தை தரவில்லை. மேலும், ஒரே ஒரு டீசல் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் மற்றும் ஃபியட் அவென்ச்சுரா இடையில்தான் இப்போது விலை, மைலேஜ், சர்வீஸ் நெட்வொர்க், டொயோட்டாவின் பிராண்டு மதிப்பு போன்றவற்றை நோக்கும்போது டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் பெஸ்ட். இருந்தாலும், ஹேட்ச்பேக் காரிலிருந்து அதிக வேறுபாடுகளுடன் ஓர் முழுமையான கிராஸ்ஓவர் தோற்றத்துடன், நம்பகத்தன்மை, செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவற்றில் ஃபியட் அவென்ச்சுராதான் சிறந்தது. சிறப்பான சர்வீஸ் கட்டமைப்பையும், சேவையைும் மேம்படுத்தினால், ஃபியட் அவென்ச்சுரா இந்த ரகத்தில் நிச்சயம் பெரிய வரவேற்பை பெறும். மேலும், எட்டியோஸ் கிராஸ், போலோகிராஸ் மாடல்களின் பேஸ் வேரியண்ட்டிலும் ஏர்பேக் வழங்கப்படுகிறது. ஆனால், அவென்ச்சுராவின் பேஸ் மாடலில் ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கிடையாது. மேலும், இந்த மூன்று கிராஸ்ஓவர் மாடல்களில் முற்றிலும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டது ஃபியட் அவென்ச்சுரா என்பதும் இதன் கூடுதல் பலம்.

தேர்வு

தேர்வு

தனிப்பட்ட விருப்பங்களின் பேரில் இந்த தேர்வு மாறுபடலாம். மூன்றில் உங்களுக்கு சிறந்ததாக படும் ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் மாடல் குறித்து கருத்துப் பெட்டியில் எழுதலாம்.

Most Read Articles
English summary
VW Cross Polo vs Toyota Etios Cross vs Fiat Avventura - Specs Comparison.
Story first published: Friday, November 14, 2014, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X