லாஸ் வேகாஸ் எலெக்ட்ரானிக் ஷோவில் அசத்திய ஆடி ஸ்பைடர்!

Audi e-tron Spyder
ஆடி கார் நிறுவனம் உருவாக்கியுள்ள எலெக்ட்ரிக் - கம் - டீஸல் காரான ஸ்பைடர்தான் இன்றைக்கு ஆட்டோமொபைல் உலகில் ஹாட் டாபிக்!

பொதுவாக எலெக்ட்ரிக் கார்களின் குறைந்த வேகம்தான் பெரிய மைனஸாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் ஆடி ஸ்பைடர் அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் சிறப்பு முதல் 4.4 நொடிகளில் 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிடுவதுதான். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் இந்த ஸ்பைடரில் பறக்கலாம்!

1,450 கிலோ எடை கொண்ட இந்த கார் சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்ததாக சான்றளிக்கப்பட்டுள்ளது. டீஸலிலும் இந்தக் காரை இயக்கலாம். லிட்டருக்கு 20 கிமீ உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

ஆனால் நகர எல்லைக்குள் இந்தக் காரை எலெக்ட்ரிக் பவரில்தான் இயக்க வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டே இந்த இரட்டை விருப்ப முறையை வைத்துள்ளனர். நகரத்தில் எலெக்ட்ரிக் காராக 50 கிமீ தூரம் வரை ஓட்ட வேண்டும். அதன் பிறகு டீஸலுக்கு மாறிக் கொள்ளலாம். இந்த 50 கி மீ தூரமும் புகையோ, வேறு மாசோ வெளியாகவில்லை என உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதாலேயே இந்த கண்டிஷனாம்.

சமீபத்தில் நடந்த லாஸ்வேகாஸ் எலெக்ட்ரானிக் பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இந்தக் காருக்கு மக்களின் நல்ல ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

Most Read Articles
English summary
The Audi e-tron Spyder is the centre of attraction at the Consumer Electronic Show in Las Vegas.The open sports car accelerates to 100 km/h (62.14 mph) in just 4.4 seconds, and top speed is electronically controlled at 250 km/h (155.34 mph). The open sports car can also drive strictly on electric power and thus with zero emissions over distances of up to 50 kilometers (31.07 miles), such as in urban areas. The top speed of 60 km/h (37.28 mph) is just fine for normal driving.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X