புதிய 800சிசி காருக்கு இயோன் என நாமகரணமிடும் ஹூண்டாய்

Hyundai Small car
சென்னை: ரூ.3லட்சத்திற்குள் ஹூண்டாய் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய 800சிசி கார் எச்ஏ-800 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கார் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இறுதிகட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள இந்த காருக்கு இயோன் என பெயரிட ஹூண்டாய் முடிவு செய்திருப்பதாக ஆட்டோகார்இண்டியா இணையதள ஆசிரியர் ஹோர்மசத் சோரப்ஜி தெரிவித்துள்ளார்.

மாருதி ஆல்ட்டோ, செவர்லே ஸ்பார்க் ஆகிய கார்களுக்கு இந்த புதிய கார் நிச்சயம் கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 800சிசி எஞ்சினுடன் வரும் இந்த கார் அதிக மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் போன்ற சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ரூ.3 லட்சம் என்ற சரியான விலையை நிர்ணயித்து இந்த காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதால், சிறிய கார் மார்க்கெட்டில் சற்று சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. புதிய கார் மூலம் இந்திய சந்தையில் மிக உயரிய இடத்திற்கு செல்லும் கணக்குகளை ஹூண்டாய் போட்டு வைத்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai plans to launch 800cc small car in India to take on the likes of the Maruti alto and the Chevrolet Spark. We have just gotten wind of the name Hyundai India plans to christen its 800cc small car as. According to AutoCarIndia editor Hormazd Sorabjee, Hyundai plans to name the 800cc small car the Eon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X