சொகுசு கார்களுக்கு ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி

BMW 3 Series
சொகுசு கார்களுக்கு ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகளை முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன.

சொகுசு கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், கார் விற்பனை சீரான வளர்ச்சி கண்டபோதிலும் இந்த மாதம் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை.

இதனால், நடப்பு ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாத நிலை எழுந்துள்ளது. இதனால், கார்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் தள்ளுபடி சலுகைகளை சொகுசு கார் நிறுவனங்கள் வழங்குகின்றன. கார் நிறுவனங்கள் மட்டுமின்றி டீலர்களும் இருப்பை குறைக்க தங்கள் பங்குக்கு சலுகைகளை வழங்குகின்றனர்.

இதனால், விலையில் 15 விழுக்காடு அளவுக்கும், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையில் தற்போது தள்ளுபடி சலுகைகள் சொகுசு கார்களுக்கு வழங்கப்படுகின்றன. எக்ஸ்-1 காருக்கு 10 விழுக்காடு வரை பிஎம்டபிள்யூ தள்ளுபடியை வழங்குகிறது. பெட்ரோல் கார்களுக்கு பென்ஸ் நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆடி நிறுவனம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சலுகைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதில், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, இலவச இன்ஸ்யூரன்ஸ் ஆகியவையும் அடங்கும். டீலர் வழங்கும் சலுகைகளையும் சேர்த்தால் ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால், இது குறுகிய கால சலுகையாக மட்டுமே இருக்கும்.

மேலும், அடுத்த ஆண்டு பல புதிய மாடல்கள் வர இருப்பதாலும் தற்போதைய மாடல்களுக்கு பிரிமியம் பிராண்டுகள் அதிக சலுகைகளை வழங்கி இருப்பை குறைத்துக் கொண்டு வருகின்றன.

Most Read Articles
English summary
German premium carmakers BMW, Audi and Mercedes-Benz have had a fairy tale story in India in the past few years. Now these companies are facing the prospect of single digit growth rates from 2013. Sales in recent months have been nothing but sluggish. Some of their dealers are struggling to reach annual sales targets and are pushing in huge discounts.
Story first published: Tuesday, November 27, 2012, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X