இந்தியாவில் விற்பனையாகும் விலையுயர்ந்த டாப்-5 கார்கள்

இந்தியாவின் கார் மார்க்கெட் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் சிறிய கார்கள்தான் எடுபடும் என்றாலும், அந்த நிலையும் மாறி தற்போது சூப்பர், ஸ்போர்ட்ஸ் கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், உலகின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் அடுத்தடுத்து கடை விரித்து வருகின்றனர். இதையும் தாண்டி வித்தியாசத்தை வேண்டி ஒரு சில வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் கார்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வாங்குகின்றனர். இந்த நிலையில், தற்போது இந்திய மார்க்கெட்டில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த கார்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

அஸ்டன் மார்ட்டின் ஒன்-77

அஸ்டன் மார்ட்டின் ஒன்-77

டிசைனுக்கு பெயர்பெற்ற அஸ்டன் மார்ட்டின் ஒன்-77 ரூ.20 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கதவுகள் கொண்ட கூபே ரகத்தை சேர்ந்த இந்த காரில் 7.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 355 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தத. 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் லிமிடேட் எடிசன் ஆக இருக்கிறது. 77 கார்களை மட்டுமே உற்பத்தி செய்து விற்க இருப்பதாக அஸ்டன் மார்ட்டின் ஏற்கனவே அறிவித்துள்ளது.

புகாட்டி வேரோன்

புகாட்டி வேரோன்

உலக அளவில் அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பெற்றதுதான் புகாட்டி வேரோன் 16.4 கிரான்ட் ஸ்போர்ட். பிரத்யேக வடிவமைப்பால் அனைவரையும் இந்த கார் வெறும் 2.5 வினாடிகளில் 0-100கிமீ வேகத்தை எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 407 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ரூ.16 கோடி விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

கோயனிசெக் அகரா ஆர்

கோயனிசெக் அகரா ஆர்

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கோயனிக்செக் நிறுவனத்தின் சூப்பர் கார். 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 1100 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சம் மணிக்கு 420 கிமீ வரை எட்ட வல்லது. இதன் டயர்கள் மணிக்கு 440 கிமீ வேகம் வரை செலுத்துவதற்கு ஏதுவான தரம் கொண்டது. ரூ.12.5 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அஸ்டன் மார்ட்டின் வி12 ஸகாட்டோ

அஸ்டன் மார்ட்டின் வி12 ஸகாட்டோ

ஸகாட்டோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த பொன்விழாவை கொண்டாடும் வகையில், அஸ்டன் மார்ட்டின் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது. 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரின் எஞ்சின் 510 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். ரூ.6.5 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கும்பெர்ட் அப்போலோ

கும்பெர்ட் அப்போலோ

ஜெர்மனியை சேர்ந்த கும்பெர்ட் நிறுவனம் தயாரிக்கும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது. 4.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0-100 கிமீ வேகத்தை 3.1 வினாடிகளிலும், 0-200 கிமீ வேகத்தை வெறும் 9.1 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை பொருந்தியது. இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 360.4 கிமீ. ரூ.5 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Luxury comes at a price! There is a chunk of Indian car buyers who desire this luxury. Have you ever wondered, what are the most expensive cars in India? Luxury cars in India, are soon becoming a fashion rather than a desire. Drivespark breaks down this expensive fashion!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X