ஆல்ட்டோவுக்கு சரியானா போட்டியாளன்தானா இயான்?- ஓர் அலசல் பார்வை

கடந்த ஆண்டு நம் நாட்டு ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கு முக்கியமான ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், பல ரகங்களி்ல் ஏராளமான புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாடல் ஹூண்டாயின் குட்டிக் கார் இயான். மார்க்கெட் லீடர் மாருதி ஆல்ட்டோவுக்கு இயானால் பேராபத்து வரப்போகிறது என நித்தம் ஒரு கணிப்புகள் கரைபுரண்டன.

ஆனால், நடந்தது என்ன? இயான் அறிமுகம் செய்யப்பட்டு முழுமையாக 8 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த புதிய காரால் ஆல்ட்டோவுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.

அறிமுகம் செய்யப்பட்டு ஓரளவு விற்பனை சூடுபிடிக்கும் என கருதப்பட்ட மறு மாதத்தில் வெறும் 6,000 கார்கள் மட்டுமே விற்பனையானது இயான். இதைத்தொடர்ந்து, 10,000 என்ற இலக்கை கடப்பதற்கு 5 மாதங்கள் ஆகியது. கடந்த மார்ச்சில் இயான் 12,500 என்ற இலக்கை எட்டியது.

இதன்பிறகு ஒரு மாதம் கூட இயான் விற்பனை 10,000ஐ தொடவில்லை. 7,000 முதல் 8,000 வரையிலான எண்ணிக்கையை பெற்று வருகிறது. ஆனால், ஹூண்டாய் முன்பு நிர்ணயித்த இலக்கு மாதத்திற்கு 12,000. இதை ஆல்ட்டோ மார்க்கெட்டிலிருந்து உடைத்து பெறுவதே ஹூண்டாய் திட்டம்.

ஆனால், மறுபக்கம் இயானால் சிறு பாதிப்பும் இன்றி ஆல்ட்டோ விற்பனை தொடர்ந்து. அதேவேளை, பெட்ரோல் விலை உள்ளிட்ட காரணங்களால் ஆல்ட்டோ விற்பனை கடுமையாக சரிந்துவிட்டது.

அதாவது, மாதத்திற்கு 35,000 என்ற அளவில் இருந்த ஆல்ட்டோ விற்பனை தற்போது மாத்திற்கு 20,000 என்ற அளவில் ஒரேடியாக சரிந்துவிட்டது. பெட்ரோல் விலை இதற்கு முக்கிய காரணம். ஆனால், இயானால் சரிந்து விட்டது என்று கூற முடியாது.

மார்க்கெட்டில் வந்து நீண்ட காலமாக வந்து பழகி விட்ட வயது முதிர்ந்த மாடலாக இருந்தாலும் ஆல்ட்டோவை ப்ரெஷ்ஷான வடிமவமைப்புடன் வந்த இயானால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. விற்பனை சரிந்த நிலையிலும், இயானை விட ஆல்ட்டோ விற்பனை மும்மடங்கு அதிகமாகவே இருந்து வருகிறது.

இயானால் வெல்ல முடியாமல் போனதற்கு சில காரணங்களை அடுக்கலாம். ஆல்ட்டோவுக்கு போட்டி என்று கூறி இயானை ரூ.2.7 லட்சத்தில் ஹூண்டாய் களமிறக்கியது. ஆனால், இரு பேஸ் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங், ஏசி என எந்த வசதிகளும் கிடையாது. ரூ.3.11 லட்சத்துக்கு மேலே சென்றால்தான் ஏசியாவது கிடைக்கும். இது எக்ஸ்ஷோரூம் விலை.

எனவே, ஷோரூம்களுக்கு சென்று ஆல்ட்டோ, இயான் விலை பட்டியலை வாங்கி வசதிகளையும், விலையையும் ஒப்பிட்டு பார்த்த வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் ஏமாற்றம் அளித்தது. இதுதான் இயான் விற்பனையில் சோபிக்க முடியாமல் தவிப்பதற்கு முக்கிய காரணம்.

3 லட்சம் ஆன்ரோடு விலையில் ஏசி உள்ளிட்ட சில வசதிகளுடன் இயானை அறிமுகப்படுத்தினால் அது நிச்சயம் ஆல்ட்டோவுக்கு போட்டியாளானாக மாற வாய்ப்பு உண்டு. நிச்சயம் வாடிக்கையாளர்களையும் இயாந் தன் பக்கம் திருப்பும்.

பெட்ரோல் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் கார்களை புறக்கணித்து வரும் நிலையில், இயான் விலையை மறுபடியும் பரிசீலித்தால் ஓரளவு விற்பனையில் நல்ல முன்னேற்றம் காணும்.

மேலும், ஆல்ட்டோ 800 என்ற புதிய காரை மாருதி விரைவில் அறிமுகப்படுத்துகிறது. அது வந்தால் இயான் நிலைமை இன்னும் சிக்கலாகிப்போகும். எனவே, இயான் விஷயத்தில் ஹூண்டாய் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது.

Most Read Articles
English summary
We are talking about India largest selling car Maruti Alto and its biggest challenger in over 5 years– the Hyundai Eon. Its been a little over 9 months that the two cars have battled each other and the results of it have been intriguingly disappointing. What promised to be an intense epic rivalry in the making has turned out to be a damp squib with a capital S. So far.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X