குட்பை சூமேக்கர்:சிறப்பு செய்தித் தொகுப்பு

ஃபார்முலா-1 ஒன் பந்தயங்களில் அசகாய சூரனாக திகழ்ந்து வந்த மைக்கேல் சூமேக்கர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். பிரேசிலிலுள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்த கிரான்ட் ப்ரீ பந்தயத்துடன் 43 வயதான சூமேக்கரின் ஃபார்முலா-1 வரலாறு முடிவுக்கு வந்தது. அலுத்துப் போகும் அளவுக்கு வெற்றிகளை குவித்த இந்த சாதனை நாயகன் பற்றிய சிறப்பு செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

மைக்கேல் சூமேக்கரின் தந்தை கட்டிட தொழிலாளி. பைக்குகள் மீது மகனுக்குள்ள ஆர்வத்தை கண்டு கஸ்டமைஸ் செய்த சிறிய பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அப்போது 6 வயதான சூமேக்கர் அந்த பைக்குடன் தனது ரேஸ் வாழ்க்கையை துவங்கினார். இந்த பைக்கை வைத்து கார்ட் கிளப் நடத்திய பைக் ரேஸில் சாம்பியனானர். இதுவே சூமேக்கரின் முதல் வெற்றி.

"ரெயின் கிங்"

2003ம் ஆண்டு மழை குறுக்கீடுகளுக்கு இடையில் நடந்த 30 ஃபார்முலா-1 பந்தயங்களில் 17ல் வெற்றி பெற்று அசத்தினார். மழையிலும் ரேஸ் டிராக்கில் லாவகமாக அதிவேகத்தில் காரை செலுத்தி அதிக வெற்றிகளை குவித்ததால் ரசிகர்கள் இவரை அன்போடு மழை அரசன் என்று அழைத்தனர்.

சர்ச்சையின் மறுபெயர்

சர்ச்சையின் மறுபெயர்

ஃபார்முலா-1 பந்தயங்களில் எந்தளவுக்கு வெற்றிகளை குவித்தாரோ அந்தளவுக்கு சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கியவர். பக்கத்தில் வரும் போட்டியாளர்களை மடக்கி ரேஸ் டிராக்கை விட்டு வெளியேற்றுவது, இடிப்பது என இவர் பண்ணிய அலும்புகளுக்கு அளவே இல்லை. 1996ம் ஆண்டு ஜாக் பீலேண்ட் என்ற டிரைவரின் காரை இடித்து ரேஸ் டிராக்கை விட்டு வெளியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோன்று, 1994ல் தனது காரில் பிரத்யேக சாப்ட்வேரை பயன்படு்த்தி வெற்றி பெற்றதாக சர்ச்சையில் சிக்கினார்.

7-முறை சாம்பியன்

7-முறை சாம்பியன்

1991ம் ஆண்டு ஃபார்முலா-1 பந்தயத்தில் இறங்கிய சூமேக்கர் மொத்தம் 305 ஃபார்முலா-1 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில், 91 முறை வெற்றி பெற்றதோடு, 7 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

சச்சினும், சூமேக்கரும்..!!

சச்சினும், சூமேக்கரும்..!!

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்த சச்சினுக்கு ஃபெராரி நிறுவனம் தனது ஸ்போர்ட்ஸ் காரை பரிசாக வழங்கியது. ஃபெராரி ஃபார்முலா-1 அணிக்காக அப்போது ரேஸில் பங்கேற்று வந்த சூமேக்கர்தான் சச்சினிடம் அந்த காரின் சாவியை வழங்கினார்.

"ரேஸ் கிங்"

பெரும்பாலான போட்டிகளில் சூமேக்கர் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றதால் ரேஸ் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இது சூமேக்கரின் ரேஸ் டிராக்

இது சூமேக்கரின் ரேஸ் டிராக்

ஃபார்முலா-1 பந்தயங்களில் 80,000 கிமீ.,க்கும் மேல் கார் ஓட்டியிருக்கிறார் சூமேக்கர். இது பூமத்திய ரேகை வழியாக பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம்.

இரண்டாவது இன்னிங்ஸ்..!

இரண்டாவது இன்னிங்ஸ்..!

ஃபெராரி அணிக்காக பங்கேற்று வந்த சூமேக்கர் கடந்த 2006ம் ஆண்டு ஃபார்முலா-1 பந்தயங்களிலிருந்து ஓய்வுபெற்றார். பின்னர், மெர்சிடிஸ் பென்ஸின் மெக்லேரன் அணிக்காக மீண்டும் 2009ம் ஆண்டில் இரண்டாவது இன்னிங்சை துவங்கினார். ஆனால், முதல் இன்னிங்ஸ் அளவுக்கு இரண்டாவது இன்னிங்சில் சூமேக்கர் சோபிக்கவில்லை. இருப்பினும், ஃபார்முலா-1 வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் சூமேக்கர் என்பதை மறுக்க இயலாது.

Most Read Articles
English summary
Formula 1 Legend Michael Schumacher who retired from racing yesterday at the Brazilian Grand Prix is a a veteran of a record breaing 305 races. He has driven more than 80,000 kilometres on track while racing alone. This is more than twice the distance you travell if you go arond the earth on its equator.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X