இந்தியாவில் க்யூ-7 உற்பத்தியை துவங்கிய ஆடி: விலை குறையுமா?

இந்தியாவில் க்யூ-7 சொகுசு எஸ்யூவியின் உற்பத்தியை துவங்கியிருக்கிறது ஆடி கார் நிறுவனம். இதனால், இந்த காரின் விலை வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை க்யூ-7 கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. போட்டியை சமாளிக்கும் வகையில் இந்தியாவிலேயே இந்த காரை அசெம்பிளிங் செய்ய துவங்கியிருக்கிறது. அவுரங்காபாத்தில் உள்ள ஆலையில் ஆண்டுக்கு 1,000 க்யூ-7 கார்களை உற்பத்தி செய்ய ஆடி இலக்கு வைத்துள்ளது. மேலும், தகவல்கள், ஆடி க்யூ-7 உற்பத்தி பிரிவு படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆடி க்யூ7 உற்பத்தி பிரிவு

ஆடி க்யூ7 உற்பத்தி பிரிவு

மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள ஸ்கோடா ஆலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி பிரிவில் ஆடி க்யூ-7 அசெம்பிளிங் செய்யப்படுகிறது.

வெயிட்டிங் பீரியட்

வெயிட்டிங் பீரியட்

இந்தியாவி்ல் க்யூ வரிசையில் அசெம்பிள் செய்யப்படும் இரண்டாவது கார் இது. இங்கேயே அசெம்பிளிங் செய்யப்படுவதால் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை அமோகம்

விற்பனை அமோகம்

க்யூ வரிசையில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்யூ-3, க்யூ-5 மற்றும் க்யூ-7 ஆகிய சொகுசு எஸ்யூவிகளின் விற்பனை அமோகமாக உள்ளது. நடப்பு ஆண்டில் முதல் 10 மாதங்களில் மட்டும் 7,273 க்யூ வரிசை கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இதனாலேயே இங்கேயே அசெம்பிளிங் செய்யும் பணிகளை துவங்கியிருக்கிறது.

விலை குறையுமா?

விலை குறையுமா?

இந்தியாவிலேயே உற்பத்தி துவங்கப்பட்டிருப்பதால் காத்திருப்பு காலம் குறைவதோடு, விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆடி இதுவரை விலை குறைப்பு குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #audi #q7 #ஆடி
English summary
Audi has started production of the Q7 luxury-class SUV at its Aurangabad plant, in the Indian state of Maharashtra. Up to 1,000 of the Audi Q7 will be built there each year to supply the Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X