ஆடியின் புதிய க்யூ-8 எஸ்யூவி: பிரம்மாண்டத்தின் மறுபெயர்

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்துக்கும், ரசனைக்கும் ஏற்ற வகையில் க்யூ வரிசை கார்களை மேம்படுத்தி வருகிறது ஆடி. அத்தோடு நில்லாமல் க்யூ வரிசையில் க்யூ-8 என்ற புதிய கிராஸ்ஓவரை வடிவமைத்து வருகிறது.
வடிவமைப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கப்போகும் இந்த கார் வசதிகளிலும், தொழில்நுட்பத்திலும் ஆடி பிராண்ட் மதிப்பை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும்.
இலகு எடை கொண்ட பாகங்களை கொண்டு தயாரிக்கப்படுவதால், தற்போதைய க்யூ-7 காரை விட 300 கிலோ எடை குறைவாக இருக்கும். ஆடியின் புதிய எம்எல்பி பிளாட்பார்மில் இந்த புதிய கார் வடிவமைக்கப்படுகிறது. 2017ம் ஆண்டில் க்யூ-8 மார்க்கெட்டிற்கு வருகிறது.
அடுத்த தலைமுறை போர்ஷே கேயென்னி மற்றும் ஃபோக்ஸ்வேகன் டூரக் பிரிமியம் எஸ்யூவிகளுக்கு இந்த புதிய ஆடி க்யூ-8 நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








