ஏஎம்ஜி பிளாக் சீரிஸ் படங்களை வெளியிட்ட மெர்சிடிஸ் பென்ஸ்

இந்த மாதம் 30ந் தேதி துவங்க இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கும் ஏஎம்ஜி பிளாக் சீரிஸ் ஸ்போர்ட்ஸ் காரின் படங்களை மெர்டிசிஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கிறது. அழகு ரசம் சொட்டும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

எடை குறைவு

எடை குறைவு

கார்பன் ஃபைபர் பிளாஸ்ட்டிக் பாகங்கள் பயன்படுத்தப்படிருப்பதால் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ஜிடி ஸ்போர்ட்ஸ் காரை விட 154 பவுன்ட் எடை குறைந்திருக்கிறது.

 ஜிடி3 காரின் சாயல்

ஜிடி3 காரின் சாயல்

ப்ரண்ட் சின் ஸ்பாய்லர், ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் உள்ளிட்டவை பழைய ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரை நினைவூட்டுகிறது.

ஃபோர்ஜ்டு அலாய் வீல்

ஃபோர்ஜ்டு அலாய் வீல்

கட்டுறுதி மிக்க இலகு எடையும் கொண்ட ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பவர்ஃபுல் வி12 எஞ்சின்

பவர்ஃபுல் வி12 எஞ்சின்

இந்த காரில் 622 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.2 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. எஸ்எல்எஸ் ஏஎம்ஜியின் எஞ்சினை விட 39 எச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

ஸ்பீட்ஷிப்ட் 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிரைவர் காக்பிட்

டிரைவர் காக்பிட்

நவீன தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த டிரைவர் காக்பிட். ஸ்பீட் சென்சிட்டிவ் பவர் ஸ்டீயரிங், அட்ஜெஸ்ட்டபிள் ரியர் சஸ்பென்ஷன் ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

வெறும் 3.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 315 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் படைத்தது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த ஸ்போர்ட்ஸ் ஐரோப்பிய நாடுகளில் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
German Luxury car maker Mercedes Benz has released the AMG Black series sports car images. The new car will be displayed in upcoming 2012 Los Angels Auto Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X