22ந் தேதி எக்ஸ்-6 கிராஸ்ஓவரை அறிமுகப்படுத்தும் பிஎம்டபிள்யூ

வரும் 22ந் தேதி 2013 எக்ஸ்-6 கிராஸ்ஓவர் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது பிஎம்டபிள்யூ. 6 சீரிஸ் கிரான் கூபே அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே அடுத்து ஒரு புதிய காரை பிஎம்டபிள்யூ களமிறக்குகிறது. எக்ஸ்-5 கிராஸ்ஓவரை விட சிறிது கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கிறது எக்ஸ்-6 கிராஸ்ஓவர்.

5 சீரிஸ் செடான் கார் மற்றும் எக்ஸ்-5 கார்களின் வடிவமைப்புகளை கலந்து கட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது எக்ஸ்-6 கிராஸ்ஓவர். புதிய எக்ஸ்-6 கிராஸ்ஓவர் காரில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டிருக்கிறது. பம்பர், பனி விளக்குகள், முன்பக்க கிரில், டெயில் லைட்டுகள் வடிவமைப்பில் மாற்றங்களை சந்தித்துள்ளன. புதிய எக்ஸ்-6 காரின் பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 இது புதிய 'எஸ்ஏவி' ரகமாம்...!!

இது புதிய 'எஸ்ஏவி' ரகமாம்...!!

ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டி வெகிக்கிள்(எஸ்ஏவி)என்ற புதிய ரகத்தில் எக்ஸ்-6 கிராஸ்ஓவரை பிஎம்டபிள்யூ களமிறக்குகிறது.

 உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு

2013 எக்ஸ்-6 கிராஸ்ஓவரின் உட்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆனால், உட்புற வண்ணங்களில் மட்டும் சிறிது மாறுதல்கள் இருக்கலாம்.

விலை

விலை

தற்போது எக்ஸ்-6 டீசல் மாடல் ரூ.68.70 லட்சத்திலும், பெட்ரோல் 501 மாடல் ரூ.85.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய 2013 மாடல் எக்ஸ்-6 கார் இதனைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினில் மாற்றம் இருக்காது. தற்போதைய மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 235 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 407 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய எக்ஸ்-6 கிராஸ்ஓவர் வர இருக்கிறது.

பவர் பேக்டு எக்ஸ்-6 வருமா?

பவர் பேக்டு எக்ஸ்-6 வருமா?

புதிய எக்ஸ்-6 கிராஸ்ஓவரின் பவர்ஃபுல் மாடலான எம்50டி 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலையும் இந்தியாவி்ல் அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. ட்ரிப்பிள் டர்போசார்ஜர் கொண்ட இந்த எஞ்சின் 381 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், இதுபற்றி பிஎம்டபிள்யூ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Most Read Articles
English summary
BMW India continues its aggressive new product launch plans with the upcoming launch of the new 2013 X6 crossover. The German premium car leader will launch the new X6 in India on November 22 within a month of launching the 6-Series Gran Coupe.
Story first published: Wednesday, November 14, 2012, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X