கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவை தருவது எது?

Posted By:
கார் வாங்கியவுடன் வாடிக்கையாளர்களுக்கு அதிக மனநிறைவை தருவது உள்ளலங்காரம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

விலை, மைலேஜ், இடவசதிதான் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவதாக கருதுகிறோம். ஆனால், தற்போது நம் நாட்டு வாடிக்கையாளர்கள் உள்ளலங்கார விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஜேடி பவர் ஏசியா பசிபிக் அமைப்பு கார் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் ஓர் ஆய்வு நடத்தியது. அதில், விலை, மைலேஜ், இடவசதி, உள்ளலங்காரம், எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ், ஏசியின் செயல்பாடு உள்ளிட்ட 10 விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை கார் வாங்கிய 8,000 வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 25 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

வாடிக்கையாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் 1000 புள்ளிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன. இதில், உள்ளலங்காரம் தங்களுக்கு மிகுந்த பிடித்த விஷயமாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உள்ளலங்காரம் அதிகபட்சமாக 839 புள்ளிகளை பெற்றது.

ரக வாரியாக பார்த்ததில் செவர்லே ஸ்பார்க், மாருதி எஸ்டீலோ, டிசையர், டொயோட்டா இன்னோவா, ஹோண்டா ஜாஸ் ஆகியவை ததத்தம் ரகங்களில் சிறந்த உள்ளலங்காரத்தை கொண்ட கார்களாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு ஒருபக்கம் இருக்கட்டும். உங்க காரில் உங்களுக்கு பிடித்த விஷயம் எது? கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

English summary
New-vehicle satisfaction is increasingly being driven by the vehicle interior, according to the J.D. Power Asia Pacific 2012 India Automotive Performance, Execution and Layout (APEAL) Study SM released today.
Please Wait while comments are loading...

Latest Photos