விற்பனையை உயர்த்த கார் நிறுவனங்களின் புதிய தந்திரம்

Car Sales
கார் விற்பனையில் மந்தமான போக்கு நிலவுவதையடுத்து வாடிக்கையாளர்களை ஷோரூம்களுக்கு வரவழைப்பதற்காக கார் விலையை மீண்டும் உயர்த்தப்போவதாக கார் நிறுவனங்கள் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன.

கடந்த செப்டம்பர், அக்டோபரில் பல்வேறு காரணங்களை கார் விலையை பெரும்பாலான நிறுவனங்கள் உயர்த்தின. இருப்பினும், பண்டிகை காலத்தையொட்டி கார் விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக, அக்டோபரில் கார் விற்பனை நல்ல வளர்ச்சியை பதிவு செய்தது.

இந்த நிலையில், தற்போது கார் விற்பனையில் சிறிது மந்தமான போக்கு நிலவுகிறது. இதையடுத்து, கார் விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தியை பல முன்னணி கார் நிறுவனங்கள் கையிலெடுத்துள்ளன. மாருதி, ஹூண்டாய், ஹோண்டா என அனைத்து நிறுவனங்களும் கார் விலையை உயர்த்தப் போவதாக பிரச்சாரத்தை கிளப்பி விட்டுள்ளன.

இதன்மூலம், கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களை முன்கூட்டியே கார் வாங்க வைக்க முடியும் என்று கார் நிறுவனங்கள் கணக்கு போட்டு இந்த பிரச்சார்ததை துவங்கியுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்சாரத்தின் மூலம் கார் வாங்க திட்டமிட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விலை உயர்வுக்கு முன்னதாகவே கார் வாங்கிவிட முடிவு செய்வர் என்று கார் நிறுவனங்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சார யுக்தி எந்த அளவுக்கு பலன் தரும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Buoyed by crafty gratifying sales, carmakers have again combined a hullabaloo of cost hikes to boost salon trade and benefit traction in a negligence market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X