அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது இந்தியாவின் முதல் சூப்பர் கார்!

டிசி கஸ்டமைசேஷன் என்ற பெயரில் கார்களை கஸ்டமைசேஷன் செய்யும் நிறுவனத்தை பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் திலீப் சாப்ரியா நடத்தி வருகிறார். அவந்தி என்ற பெயரில் புதிய சூப்பர் காரை திலீப் சாப்ரியா வடிவமைத்துள்ளார். கடந்த ஜனவரியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இந்த காரை டெல்லியில் அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில், முழுக்க முழுக்க உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் சூப்பர் கார் என்ற பெருமையை பெற்றுள்ள அவந்தி அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. இன்னும் கூடுதல் தகவல்களை படங்களுடன் ஸ்லைடரில் காணலாம்.

அடுத்த ஆண்டு டிசம்பர் முதல் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கும் அவந்தி சூப்பர் கார், முதல் 4 மாதங்களில் 300 கார்களை விற்பனை செய்ய டிசி திட்டமிட்டுள்ளது. மேலும், 2016ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2,000 அவந்தி சூப்பர் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக டிசி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மாதத்தில் நாடு முழுவதும் 16 புதிய டீலர்களை திறக்க இருக்கிறது டிசி நிறுவனம். கார் கஸ்டமைசேஷன் செய்யும் பணிகளோடு, அவந்தி காரின் விற்பனையும் இந்த ஷோரூம்கள் வழியாக மேற்கொள்ளப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவாலான விலையில் வரும் அவந்தி

சவாலான விலையில் வரும் அவந்தி

வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சூப்பர் கார்கள் பல கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சூப்பர் கார் ரூ.30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.

அவந்தி உற்பத்திக்கு புதிய ஆலை

அவந்தி உற்பத்திக்கு புதிய ஆலை

மஹாராஷ்டிர மாநிலம் தலேகானில் அவந்தி காரை உற்பத்தி செய்வதற்காக புதிய ஆலையை டிசி அமைத்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆலையில் அவந்தி காரின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.

டெலிவிரி எப்போது?

டெலிவிரி எப்போது?

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அவந்தி கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவந்தி காரை வாங்குவதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இப்போதே ஆர்வமுடன் விபரங்களை கேட்டு பெற்று வருவதாக டிசி தெரிவித்துள்ளது.

அவந்தி மீது ஆர்வம் காட்டும் விமான பைலட்டுகள்

அவந்தி மீது ஆர்வம் காட்டும் விமான பைலட்டுகள்

அவந்தியை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விமான பைலட்டுகள் என்று திலீப் சாப்ரியா தெரிவித்துள்ளார். இளம் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து அவந்தி காரை விற்பனை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எஞ்சின்

எஞ்சின்

2 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட அவந்தி சூப்பர் காரில் ஃபோர்டு நிறுவனத்தின் 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

Tamil
English summary
DC car customization company is planning to launch Avanti super car by next year end. The company is aiming to sell 2,000 units of the DC Design custom, Avanti mode by 2016. The Avanti was launched in January this year with a 2.0 litre Ford EcoBoost engine.
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more