யுட்டிலிட்டி மார்க்கெட்டில் மாருதியை 2-ம் இடத்திற்கு உயர்த்திய எர்டிகா

மாருதி எர்டிகா
எர்டிகா புண்ணியத்தில் யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில டொயோட்டாவை பின்னுக்குத் தள்ளி மாருதி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் விற்பனைக்கு வந்த மாருதி எர்டிகா எம்பிவி ரக கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம், போட்டியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் மஹிந்திராதான் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, டொயோட்டா நீண்ட காலமாக இரண்டாம் இடத்தை தக்கவைத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர்-அக்டோபர் ஆகிய இரு மாதங்களின் விற்பனை நிலவரத்தின்படி, டொயோட்டாவை பின்னுக்குத் தள்ளி மாருதி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

மாருதியின் இந்த விற்பனை உயர்வுக்கு எர்டிகாதான் முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது. மேலும், மஹிந்திரா முதலிடத்தில் இருந்தாலும் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதற்கும் எர்டிகா மீதான மோகம்தான் காரணம் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் 56 விழுக்காடாக இருந்த மஹிந்திராவின் மார்க்கெட் பங்களிப்பு தற்போது 47 விழுக்காடாக குறைந்துள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதேபோன்று, டொயோட்டாவின் மார்க்கெட் பங்களிப்பு 0.5 விழுக்காடு குறைந்திருக்கிறது. அதேவேளை, கடநத் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2.1 விழுக்காடாக இருந்த மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு தற்போது 15.4 விழுக்காடா உயர்ந்திருக்கிறது.

மொத்தத்தில் செப்டம்பர்-அக்டோபர் ஆகிய இரு மாதங்களில் மாருதி நிறுவனம் மொத்தத்தில் 7,400 கார்களையும், டொயோட்டா நிறுவனம் 7,241 இன்னோவா கார்களையும் விற்பனை செய்துள்ளது. இருப்பினும், நடப்பு ஆண்டில் ஒட்டுமொத்த யுட்டிலிட்டி கார் விற்பனையில் டொயோட்டா இரண்டாம் இடம் வகிக்கிறது.

ஆனால், வரும் மாதங்களின் விற்பனையில் எர்டிகாவால் டொயோட்டாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுவது உறுதி என்கின்றனர் சந்தை நிபுணர்கள். மஹிந்திரா மற்றும் டொயோட்டாவின் மார்க்கெட் பங்களிப்பில் ஏற்பட்டிருக்கும் சரிவுக்கு எர்டிகா தவிர, ரெனோ டஸ்ட்டரும் முக்கிய காரணியாக விளங்குகிறது.

இந்த நிலையில், யுட்டிலிட்டி மார்க்கெட்டில் நல்ல வளர்ச்சி பெற்று வருவது மாருதியை மேலும் உசுப்பேற்றியிருக்கிறது. எனவே, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எக்ஸ்ஏ-ஆல்ஃபா காம்பெக்ட் எஸ்யூவியையும் விரைவில் களமிறக்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

Most Read Articles
English summary
Country's largest passenger car marker Maruti is on its way to conquer a new territory, as the sales of its Ertiga model overcame those of Toyota's Innova during September-October 2012.
Story first published: Tuesday, November 20, 2012, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X