2013 ரெனோ ஃப்ளூயன்ஸ்: முதல் பார்வை

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நாளை துவங்க இருக்கும் ஆட்டோ ஷோவில் மேம்படுத்தப்பட்ட புதிய ப்ளூயன்ஸ் காரை ரெனோ பார்வைக்கு வைக்க இருக்கிறது. பல விதங்களிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய ப்ளூயன்ஸ் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

தற்போதைய மாடலின் டிசைனில் இருந்து பல மாற்றங்களை சந்தித்துள்ள புதிய ப்ளூயன்ஸ் காரின் பிரத்யேக படங்களை டிரைவ்ஸ்பார்க் வாசகர்களின் பார்வைக்கு ஒருநாள் முன்னதாக நாம் வழங்குகிறோம். ஸ்லைடரில் படங்கள் மற்றும் இதர தகவல்களை காணலாம்.

முகப்பு

முகப்பு

கிலியோ ஹேட்ச்பேக் காரின் முகப்பை சற்று ஒத்திருக்கும் புதிய ஃப்ளூயன்ஸ் புதிய கிரில்லை கொண்டிருப்பதால் தற்போதைய மாடலைவிட வடிவமைப்பில் இன்னும் கவர்ச்சியாக மாறியிருக்கிறது. எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

முகப்பை தவிர பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் சிறிய அளவிலான மாறுதல்களை செய்யப்பட்டிருப்பதால் அதிக வேறுபாடுகள் இல்லை.

ரதம்

ரதம்

புதிய அலாய் வீல் டிசைன் புதிய ஃப்ளூயன்சை ரதம் போன்று தோற்றத்தை தருகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இங்கு ஐரோப்பிய மாடலின் படம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா வரும்போதும் பெரிய மாறுதல்கள் இருக்காது. அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், லெதர் இருக்கைகள், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் என அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.

நேவிகேஷன் சிஸ்டம்

நேவிகேஷன் சிஸ்டம்

சென்ட்ரல் கன்சோலில் ஏசி வென்ட்டுகளுக்கு மேல் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம் செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் வழிகாட்டும் வசதியை வழங்கும்.

 ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்

புதிய ஃப்ளூயன்ஸ் காரின் பெட்ரோல் மாடல் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட மாடலிலும் அறிமுகமாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

115 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ஃப்ளூயன்ஸ் கிடைக்கும். டீசல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 110 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. இதை களையும் விதமாக அதிக பவர் கொண்டதாக புதிய ஃப்ளூயன்ஸ் டீசல் மாடல் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் புதிய ஃப்ளூயன்ஸ் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
French carmaker Renault has revealed its facelift 2013 Fluence sedan pictures. Company will unveil the 2013 Renault Fluence premium sedan at Turky Motor Show. The new Fluence comes with an upgraded petrol engine and a host of new features.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X