ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி- சிறப்பு தகவல்கள்

கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஃபோர்டு பார்வைக்கு வைத்திருந்தது. அப்போதே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது ஈக்கோஸ்போர்ட். இந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் இந்த புதிய எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகப்படுத்த ஃபோர்டு முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய காரை அறிமுகப்படுத்த இசைவு தெரிவித்துள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

அட்டகாசமான வடிவமைப்பு, சிறந்த தொழில்நுட்பத்துடன் வரும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி அடுத்து வரும் ஆண்டுகளில் ஃபோர்டு விற்பனை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய எஸ்யூவி பற்றிய சில முக்கிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

உலக அளவில் விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு ஃபோர்டு உருவாக்கிய புதிய குளோபல் பிளாட்பார்மில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மாடலின் சிறப்பு

இந்திய மாடலின் சிறப்பு

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஈக்கோஸ்போர்ட் வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி- சிறப்பு தகவல்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி- சிறப்பு தகவல்கள்

பிரேசில் மார்க்கெட்டில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட ஈக்கோஸ்போர்ட் அங்கு ரெனோ டஸ்ட்டருக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறது. இந்தியாவிலும் ரெனோ டஸ்ட்டருக்கு கடும் போட்டியை கொடுக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதோடு அதிக மைலேஜையும் தரும். ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்பட உள்ளது.

கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ்

இந்தியாவில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், ரெனோ டஸ்ட்டர் தற்போது மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டாம் தலைமுறை

இரண்டாம் தலைமுறை

இந்தியா வரும் ஈக்கோஸ்போர்ட் இரண்டாம் தலைமுறை கார்.

ரூ.750 கோடி முதலீடு

ரூ.750 கோடி முதலீடு

இந்த புதிய எஸ்யூவி தயாரிப்புக்காக சென்னை ஆலையில் ரூ.750 கோடியை முதலீடு செய்துள்ளது ஃபோர்டு. கூடுதலாக 400 பேருக்கு வேலைவாய்ப்பையும் தந்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி- சிறப்பு தகவல்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி- சிறப்பு தகவல்கள்

காம்பெக்ட் எஸ்யூவி ரகத்தில் இந்த எஸ்யூவியில் 5 பேர் பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கும்.

விலை

விலை

ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சத்துக்கு இடையிலான விலையில் ஈக்கோஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ford #ecosport #four wheeler
English summary
Ford has invited Tamilnadu CM Jayalalithaa to unveil their latest product and the carmaker has said the chief minister has graciously agreed. The EcoSport's launch will be a pivotal event for Ford as sales of SUVs have picked up in recent years. Here are given some special information about the upcoming new compact SUV.
Story first published: Thursday, November 29, 2012, 8:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X