செவர்லே செயிலுக்கு ஜிஎம் வைத்த இலக்கு

Sail UVA
சந்தை மந்தமாக இருந்தபோதிலும், மாதத்திற்கு 4,000 செவர்லே செயில் கார்களை விற்பனை செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் இலக்கு வைத்துள்ளது.

செவர்லே பிராண்டில் செயில் யுவா பிரிமியம் ஹேட்ச்பேக் காரை சமீபத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. தாராள இடவசதி மற்றும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருக்கும் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் நிச்சயம் பிற கார்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவில் நேற்று செயில் யுவா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற ஜெனரல் மோட்டார்ஸ் துணைத் தலைவர் பாலேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்," கார் கடன் வட்டி விகிதம் மற்றும் பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் கார் சந்தை மந்தமடைந்துள்ளது.

இருப்பினும், மாதத்திற்கு 4,000 செயில் யுவா கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். இந்த இலக்கை எளிதாக எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது," என்றார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 2 கார் மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய செடான் மற்றும் என்ஜாய் என்ற பன்முக பயன்பாட்டு வாகனத்தையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஜிஎம்.

Most Read Articles
English summary
The American carmaker is looking to sell at least 250 units of the new car in the state. The Sail U-VA has replaced the Aveo U-VA.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X