புதிய எலக்ட்ரிக் செவர்லே பீட்: படங்களுடன் தகவல்கள்

எலக்ட்ரிக் செவர்லே பீட் காரின் படங்கள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களை ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் உற்பத்தி நிலையை எட்டியிருக்கும் இந்த எலக்ட்ரிக் கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

வெளிப்புறத்தில் எந்த மாறுதல்களும் இருக்காது. ஆனால், உட்புறத்தில் பேட்டரிகளை பொருத்துவதற்கு ஏதுவாக பல மாறுதல்களை செய்துள்ளது ஜிஎம்.

சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 7 மணிநேரம் எடுத்துக்கொள்ளும்.

அம்சங்கள்

அம்சங்கள்

பெட்ரோல் பீட் காரில் இருக்கும் அதே வசதிகள் மற்றும் ஆக்சஸெரீஸ்களுடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

பேட்டரி

பேட்டரி

இந்த காரில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்ஃபுல் மோட்டார்

பவர்ஃபுல் மோட்டார்

134 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பவர்ஃபுல் மோட்டார் இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும். அத்தோடு, இந்த மோட்டார் 542 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பிக்கப்

பிக்கப்

0-100 கிமீ வேகத்தை இந்த எலக்ட்ரிக் கார் வெறும் 8 வினாடிகளில் எட்டிவிடும்.

ஸ்மார்ட் வசதி

ஸ்மார்ட் வசதி

இந்த காரின் முக்கிய வசதி சார்ஜ் ஆவதை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமும் கண்காணிக்க முடியும்.

 அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

அடுத்த ஆண்டு மத்தியில் அமெரிக்காவில் முதலில் இந்த பீட் கார் விற்பனைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் இந்த எலக்ட்ரிக் பீட் காரை விற்பனைக்கு விட ஜிஎம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
American car maker General motors has revealed details about Electric version of Chevrolet Beat car. Here are given some exclusive images and Specifications of electric Beat.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X