ஹோண்டா அமேஸ் டீசல் செடானின் 2 முக்கிய அம்சங்கள்!

Honda Amaze
தாராள இடவசதி மற்றும் அதிக மைலேஜ் ஆகிய இரண்டும்தான் ஹோண்டா அமேஸ் காரின் முக்கிய அம்சங்களாக இருக்குமென ஆட்டோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆணடு ஏப்ரலில் பிரியோவின் செடான் கார் வெர்ஷனை ஹோண்டா களமிறக்குகிறது. அமேஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த கார் டீசல் மாடலில் வரும் முதல் ஹோண்டா கார் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

இந்த நிலையில், ஹோண்டா அமேஸ் காரின் முக்கிய அம்சங்கள் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதில், தாராள இடவசதியும், அதிக மைலேஜும் புதிய அமேஸ் காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என அந்த தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, பின் இருக்கையில் அமரும் பயணிகளுக்கு கால்கள் வைக்க தாராள இடவசதி கொண்டதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

4 மீட்டருக்கும் குறைவாக வர இருக்கும் இந்த புதிய கார் மாருதி டிசையருக்கு நேரடி போட்டியாளராக இருக்கும். இந்த கார் ரூ.5.4 லட்சம் ஆரம்ப விலை முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையில் புதிய அமேஸ் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The all new Honda Amaze sedan will come up with incredible amount of legroom and knee-room for the rear seat occupants and great fuel efficiency.
Story first published: Monday, November 19, 2012, 14:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X