ஜனவரியில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா சிஆர்வி!

பிரிமியம் எஸ்யூவி மாடல்களில் ஹோண்டா சிஆர்-விக்கு தனி இடம் உண்டு. கடந்த 1997ம் ஆண்டு விற்பனைக்கு வந்தநிலையில், இதுவரையில் உலக அளவில் 5 மில்லியன் சிஆர்-வி கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் ரசனை மாறிவருவதற்கு ஏற்ப சிஆர்-வி கிராஸ்ஓவர் காரின் வடிவமைப்பில் மாறுதல்களுடனும், கூடுதல் வசதிகளுடனும் ஹோண்டா மாற்றியுள்ளது. நான்காம் தலைமுறை கண்டிருக்கும் புதிய சிஆர்-வி பழைய மாடலைவிட நீளம் மற்றும் உயரத்தில் குறைவாக உள்ளது.
இருப்பினும், உட்புறத்தில் முன்பைவிட அதிக இடவசதியுடனும், 147 லிட்டர் அளவுக்கு கூடுதல் பூட் ரூமுடன்(பொருட்களை வைக்கும் அறை) வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்-1 கார்கள் போன்று தட்டையான அடிப்புறத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் 3 டெசிபல் அளவுக்கு இறைச்சல் குறைவாக இருக்கும் என்கிறது ஹோண்டா. இந்த நிலையில், புதிய சிஆர்-வி கிராஸ்ஓவர் கார் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
155 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் மற்றும் 150 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் சிஆர்-வி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தை தொடர்ந்து வரும் ஜனவரியில் இந்தியாவில் புதிய சிஆர்-வி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஹோண்டா உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்தியாவில் பெட்ரோல் மாடல் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று ஹோண்டா தெரிவித்திருப்பது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








