பிரியோவைவிட சின்ன காரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா!

ரூ.4 லட்சம் விலைக்குள் புதிய குட்டிக் காரை அறிமுகப்படுத்த ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

என்-பாக்ஸ் பிளாட்பார்மில் இந்த புதிய காரை ஹோண்டா வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியா, சீனா உள்ளிட்ட வேகமாக வளரும் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய குட்டிக் காரை களமிறக்குகிறது.

அடுத்து வரும் ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களிலிருந்து காருக்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்களை குறிவைத்தே இந்த புதிய காரை ஹோண்டா களமிறக்க உள்ளது.

ஜப்பான் மார்க்கெட்டில் தற்போது என்-பாக்ஸ் பிளாட்பார்மில் என்-பாக்ஸ், என்-பாக்ஸ்+ மற்றும் என்-ஒன் ஆகிய 3 கார்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில், ஹோண்டா சமீபத்தில் அறிமுகம் செய்த என்-ஒன் காரை அடிப்படையாக வைத்து புதிய காரை வடிவமைத்து வருவதாக தெரிகிறது.

இந்த காரில் புதிய 660 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் . இது சிறிய கார் என்றாலும் மாருதி வேகன்-ஆர் போன்று 'டால்பாய்' டிசைனை கொண்டிருக்கும் என்பதால் அதிக ஹெட்ரூம் கிடைக்கும் என்பதோடு, காருக்குள் ஏறி, இறங்குவதும் எளிதாக இருக்கும்.

பிரியோவுக்கு கீழே நிலை நிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய குட்டிக் கார் ரூ.4 லட்சத்துக்குள் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

ஹோண்டா என்-ஒன் படங்கள்

Most Read Articles
English summary
Japanese car maker Honda plans to enter the sub-Brio small car category in emerging markets like India, China and other parts of South East Asia.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X