புதிய மைக்ரோ கார் கான்செப்ட்டை அறிமுகம் செய்த ஹோண்டா

Honda Micro Car
அலுவலகம், ஷாப்பிங் செல்வது உள்ளிட்ட குறைந்த தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் புதிய மைக்ரோ கார் ஒன்றை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு ஜப்பானில் இந்த எலக்ட்ரிக் கார் பலவகைகளிலும் இயக்கி உண்மையான நிலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து சோதித்து பார்க்கப்பட உள்ளது.

மொத்தம் 3 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கதவுகள் கொண்ட இந்த காரில் ஏறி இறங்குவது சுலபமாக இருக்கும் என்கிறது ஹோண்டா. 2,500 மிமீ நீளம், 1,250 மிமீ அகலம் மற்றும் 1445 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் இந்த மைக்ரோ காரில் 15 கேவி லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 3 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் இந்த காரில் 60 கிமீ வரை செல்லலாம். அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்ல முடியும்.

சாதாரண பயணங்கள் தவிர வர்த்தக ரீதியில் ஓட்டல் மற்றும் இதர நிறுவனங்கள் பொருட்களை ஹோம் டெலிவிரி செய்வதற்கு ஏதுவாக இந்த காரை மாற்றிக்கொள்ள முடியும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. டேப்லெட், ஸ்மார்ட்போன்களை இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கும் வசதியையும், ஆடியோ சிஸ்டம், ரியர் வியூ பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளையும் பெற்றிருக்கிறது.

இந்த மைக்ரோ காரின் கூரை மீது சோலார் பேனல்களை பொருத்தும் முயற்சிகளை ஹோண்டா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் சூரிய மின்சக்தி மூலம் கூடுதல் தூரம் செல்லத்தக்க வகையில் இந்த தொழில்நுட்பம் இருக்கும்.

Most Read Articles
English summary
Honda cars has unveiled the Micro Commuter Prototype, a micro-sized short distance EV commuter. This vehicle was developed in consideration of the vehicle categories for micro-sized mobility products.
Story first published: Friday, November 16, 2012, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X