30ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ரேஞ்ச்ரோவர்

30ந் தேதி புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது லேண்ட்ரோவர் நிறுவனம்.அதிக இடவசதியுடனும் முந்தைய மாடலைவிட சிறந்த கட்டுமானத்துடன் புதிய ரேஞ்ச்ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.அலுமினியம் மோனோகாக் சேஸிஸில் தயாரிக்கப்படும் உலகின் முதல் எஸ்யூவியாக வருகிறது இந்த புதிய ரேஞ்ச்ரோவர்.

எடை குறைந்தது

எடை குறைந்தது

இலகு எடை, அதிக உறுதித்தன்மை கொண்ட பாகங்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் முந்தயை மாடலைவிட 180 கிலோ எடை குறைந்துள்ளது.

டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம்

டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம்

ஆட்டோமேட்டிக் வசதியுடன் கொண்ட டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் கரடு முரடான சாலைகளுக்கு ஏற்ப டிரைவிங் சிஸ்டம் தானாகவே மாறிவிடும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், 380மிமீ டிஸ்க் பிரேக், ஏர்பேக்ஸ் மற்றும் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

4.4 லிட்டர் வி8 ட்வின் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 334 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இதன் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலையும் லேண்ட்ரோவர் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

விலை

விலை

பேஸ் வேரியண்ட் ரூ.1.73 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், மெட்டாலிக் பெயின்ட் வேரியண்ட் ரூ.1.75 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும், எக்ஸ்க்ளூசிவ் பெயின்ட் ஷேட் வேரியண்ட் ரூ.1.78 கோடி விலையிலும் வருகிறது.

Most Read Articles
English summary
British Luxury suv maker Land Rover will launch the all-new Range Rover in India on Friday, November 30.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X