எக்ஸ்யூவியின் பெட்ரோல் மாடலை களமிறக்கும் மஹிந்திரா!

Posted By:
பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மிகப் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டீலர்களில் ஒரு நிமிடம் கூட தங்காத அளவுக்கு விற்பனை றெக்கை கட்டி பறக்கிறது.

இந்த நிலையில், பெட்ரோல் எஞ்சினுடன் எக்ஸ்யூவியை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா. இதுதவிர ஆட்டோமேட்டிக் மாடல் எக்ஸ்யூவியையும் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இந்திய மார்க்கெட்டில் பெட்ரோல் எக்ஸ்யூவிக்கு போதிய வரவேற்பு இல்லாவிட்டாலும், டீசலை விட குறைவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளில் பெட்ரோல் எக்ஸ்யூவி பெரும் வரவேற்பை பெறும் என்று மஹிந்திரா கருதுகிறது.

ஆட்டோமேட்டிக் மாடலில் 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து எக்ஸ்யூவிக்கு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸை பெறுவதற்கு மஹிந்திரா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் எக்ஸ்யூவி மாடல்கள் வடிவமைக்கப்பட்டு வருவதை மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரி ரூஸ்பே இரானி உறுதிப்படுத்தியிருக்கிறார்.

English summary
Country's largest utility car manufacturer Mahindra is planning to launch Petrol and Automatic variants of XUV 500 by next year.
Story first published: Saturday, December 22, 2012, 13:12 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos