மாருதி ஆல்ட்டோ 800 vs ஹூண்டாய் இயான்: ஒப்பீட்டு அலசல்

பட்ஜெட் விலையில் கார் வாங்கபபோகும் வாடிக்கையாளர்களின் பரிசீலனையில் ஆல்ட்டோவும், இயானும் முதலிடம் பிடிக்கின்றன. இந்த நிலையில், புதிய ஆல்ட்டோவை மாருதி சமீபத்தில் களமிறக்கிவிட்டுள்ளது. மார்க்கெட்டில் நேரடி போட்டியாளர்களான புதிய ஆல்ட்டோ 800 மற்றும் இயான் கார்களின் விலை, மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ், இடவசதி என பல விதத்தில் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. இரு கார்களுக்கும் இடையிலான அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

இரு கார்களும் வடிவமைப்பில் குறைசொல்லி ஒதுக்க முடியாது. ஆனால், புளூயிடிக் டிசைன் கொண்ட இயான் வடிவமைப்பில் கூடுதல் மதிப்பெண்களை பெறுகிறது.

எஞ்சின் & பெர்ஃபார்மென்ஸ்

எஞ்சின் & பெர்ஃபார்மென்ஸ்

புதிய ஆல்ட்டோவில் 48 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 796 சிசி எஞ்சினும், இயானில் 56 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 814 சிசி எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கின்றன. பெர்ஃபார்மென்ஸிலும் இயான் ஸ்கோர் செய்கிறது.

இடவசதி

இடவசதி

புதிய ஆல்ட்டோவைவிட 10மிமீ நீளத்திலும், 600மிமீ அகலத்திலும், 25 மிமீ உயரத்திலும் கூடுதலாக இருக்கிறது இயான். இதனால், உட்புறத்தில் ஆல்ட்டோவைவிட கூடுதல் இடவசதியை உணர்த்துகிறது இயான்.

லெக்ரூம்

லெக்ரூம்

ஆல்ட்டோவைவிட இயானின் வீல் பேஸ் கூடுதலாக இருப்பதால் பின் இருக்கையில் லெக்ரூம் சிறப்பாக இருக்கிறது.

கிரவுன்ட் கிளியரன்ஸ்

கிரவுன்ட் கிளியரன்ஸ்

ஆல்ட்டோ 160மிமீ கிரவுன்ட் கிளியரன்சையும், இயான் 170 மிமீ கிரவுன்ட் கிளியரன்சையும் கொண்டுள்ளன. நம் நாட்டு சாலைகளுக்கு கிரவுன்ட் கிளியரன்ஸ் அதிகம் இருந்தால் நல்லது என்பதால் இயான் முன்னிலை பெறுகிறது.

அம்சங்கள்

அம்சங்கள்

பேஸ் வேரியண்ட் ஹூண்டாய் இயானில் முன்பக்க பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், பாட்டில் ஹோல்டர், முன்பக்க டோர் ஆர்ம் ரெஸ்ட், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக உள்ளன. ஆனால், புதிய ஆல்ட்டோவின் பேஸ் வேரியண்ட்டில் முன்பக்க பவர் விண்டோஸ் மட்டுமே குறிப்பிட்டு கூறலாம்.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மற்றும் எல்பிஜி இயான் மாடல்கள் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது. புதிய ஆல்ட்டோவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தருவதாகவும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.46 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் தெரிவித்துள்ளது. மைலேஜில் மாருதியின் புதிய ஆல்ட்டோ சிறந்ததாக இருக்கிறது.

தீர்ப்பு

தீர்ப்பு

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 கார் ரூ.2.95 லட்சம் ஆரம்ப விலையிலும், ஹூண்டாய் இயான் ரூ.3.18 ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. விலை, மைலேஜ் உள்ளிட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போருக்கு புதிய ஆல்ட்டோ சிறந்த கார். தரம், இடவசதி, புதுமையான டிசைன் விரும்பிகளுக்கு ஹூண்டாய் இயான் பெஸ்ட். தற்போது ஹூண்டாய் இயான் காருக்கு ரூ.29,250 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால், புதிய ஆல்ட்டோவுக்கு சமீபத்தில்தான் மார்க்கெட்டிற்கு வந்திருப்பதால் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, தற்போதைய நிலையில் ஆல்ட்டோவுக்கு இணையான விலையிலேயே இயானும் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
Hyundai has compared the Eon with the Alto 800 on three basic parameters - price, mileage, space and features. Here is a look at how the entry level variants of the two cars fair.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X