ஆட்டோமேட்டிக் எர்டிகா பற்றிய புதிய தகவல்கள்!

Maruti Ertiga
ஆட்டோமேட்டிக் எர்டிகாவை முதலில் இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்த சுஸுகி திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர்தான் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் எர்டிகா விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஸ்விப்ட், டிசையர் போன்றே எர்டிகாவும் விற்பனையிலும் பின்னி எடுத்து வருகிறது. எம்பிவி செக்மென்ட்டில் சரியான விலையில் வந்திறங்கிய எர்டிகா பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைப்பதும் கூடுதல் பலம். தற்போது எர்டிகாவின் டீசல் மாடலுக்கு 6 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீள்கிறது.

எர்டிகாவின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தோம். ஆனால், ஆட்டோமேட்டிக் எர்டிகா முதலில் இந்தோனேஷிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்துதான் இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தோனேஷியாவில் விரைவில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எஸ்எக்ஸ்4 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் எர்டிகாவிலும் பொருத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதவிர, டூயல் ஸோன் ஏசி வசதியுடன் எர்டிகாவை அங்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தவும் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Suzuki is responding to customer feedback by add in dual AC as well as an automatic variant. The Ertiga's automatic variant will most likely get the four speed auto box used in the Swift and Swift DZire.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X