பென்ஸின் புதிய எஸ்யூவி அரக்கன்: படங்களுடன் தகவல்கள்

எனர்-ஜி-ஃபோர்ஸ் என்ற பெயரில் புதிய கான்செப்ட் காரின் படங்களை பென்ஸ் வெளியிட்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் இந்த காரை பார்வைக்கு வைக்க இருக்கிறது பென்ஸ். போலீசாருக்கான ரோந்து வாகனமாக பயன்படும் வகையில் ஜி-வேகன் பிளாட்பார்மில் இதனை வடிவமைத்துள்ளனர் பென்ஸ் டிசைனர்கள். படங்களுடன் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ரோந்து வாகனம்

ரோந்து வாகனம்

2025ல் போலீசாரின் நெடுஞ்சாலை ரோந்து வாகனமாக பயன்படுத்தும் விதத்தில் இந்த புதிய கான்செப்ட் காரை பென்ஸ் வடிவமைத்துள்ளது.

தனி நபர் பயன்பாடு

தனி நபர் பயன்பாடு

ரோந்து வாகனமாக மட்டுமின்றி, நகர்ப்புறங்களில் தனிநபர் பயன்பாட்டு வாகனமாகவும் பயன்படுத்த முடியும் என்கிறது பென்ஸ்

4 வீல் டிரைவ் சிஸ்டம்

4 வீல் டிரைவ் சிஸ்டம்

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருப்பதால் கரடு முரடான மாலைச்சாலைகளில் பயன்படுத்தும் வகையில் ஆல் இன் ஒன் எஸ்யூவியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜி-வேகன் பிளாட்பார்ம்

ஜி-வேகன் பிளாட்பார்ம்

பென்ஸின் பிரபலமான ஜி-வேகனை அடிப்படையாக கொண்டே இந்த புதிய கான்செப்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

ராணுவ பயன்பாடு

ராணுவ பயன்பாடு

உலகின் பல நாடுகளின் ராணுவத்தில் ஜி-வேகன் ராணுவ வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. ஜி-வேகனுக்கு மாற்றாக அடுத்த தலைமுறை காராக இதனை களமிறக்க பென்ஸ் உத்தேசித்துள்ளது.

டூல் பாக்ஸ்

டூல் பாக்ஸ்

பின்புறம் டூல் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

குடிநீர் தொட்டி

குடிநீர் தொட்டி

கூரையின் மேற்புறத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இந்த தொட்டியில் இருந்து பெற முடியும். பாலைவனப் பகுதியில் செல்லும்போது பயன்படும்.

எலக்ட்ரிக் கார்

எலக்ட்ரிக் கார்

இந்த கார் பேட்டரியில் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 சக்கரங்களிலும் தனித்தனி எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
The Mercedes-Benz Ener-G-Force is the latest concept car developed by the German prmium car brand. Based on the iconic G Wagon, this concept car has been conceived keeping in mind the law enforcement vehicles that can be used I the future.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X