இந்த ஆண்டு 300 கார்களை விற்க மினி இலக்கு

Mini Cooper
இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்து முதல் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்கை நவம்பரிலேயே கடந்து விட்டதாக மினி தெரிவித்துள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்திய பயணத்தை துவங்கியது இங்கிலாந்தை சேர்ந்த மினி பிராண்டு. டெல்லி, மும்பையில் டீலர்களை திறந்த மினி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் நகரில் தென் இந்தியாவின் முதல் ஷோரூமை திறந்திருக்கிறது.

முதல் ஆண்டில் 2 ஷோரூம்கள் வழியாக நவம்பர் வரை 280 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும், முதல் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முன்கூட்டியே அடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பரில் 20 கார்களை விற்பனை செய்து இந்த ஆண்டில் 300 கார்கள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதற்கும் புதிய இலக்கு வைத்துள்ளது. இதனிடையே, புதிய ஷோரூம்களை திறக்கும் பணிகளை மினி துரிதப்படுத்தியிருக்கிறது.

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் புதிய ஷோரூம்களை திறப்பதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த ஆண்டு தனது கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற முடியும் என அந்த நிறுவனம் நம்புகிறது.

Most Read Articles
English summary
Mini, the British premium car brand owned by BMW Group has surpassed its own sales targets in India. Mini, which was launched in India during the 2012 Delhi Auto Expo, has sold as many as 280 cars this year until November.
Story first published: Saturday, December 22, 2012, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X