இந்தியாவில் பஜெரோ, லான்சர் உற்பத்தியை நிறுத்திய மிட்சுபிஷி

Old Pajero
இந்தியாவில் பஜெரோ எஸ்எப்எக்ஸ் பிரிமியம் எஸ்யூவி மற்றும் லான்சர் செடான் கார்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது மிட்சுபிஷி-ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூட்டணி.

ஜப்பானிய நிறுவனமான மிட்சுபிஷி ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கூட்டணியில் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த கூட்டணி நிறுவனம் விற்பனை செய்து வரும் பஜெரோ எஸ்யூவி விற்பனையில் எதிர்பார்த்த அளவு இல்லை. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால் விலை அதிகம் என்பதால் போட்டியாளர்களுடம் போட்டி போட முடியாமல் திணறி வந்தது.

இந்த நிலையில், கடந்த மார்ச்சில் பஜெரோ ஸ்போர்ட் என்ற புதிய எஸ்யூவியை மிட்சுபிஷி விற்பனைக்கு கொண்டு வந்தது. மேலும், சமீபத்தில் இந்த எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்ய இருப்பதாக தெரிவித்து விலையையும் குறைத்தது. எனவே, பழைய பஜெரோ உற்பத்தியை நிறுத்திவிட்டது மிட்சுபிஷி. மேலும், பழைய பஜெரோ எஸ்எப்எக்ஸ் எஸ்யூவியின் எஞ்சினும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்பதும் காரணம்.

இதேபோன்று, லான்சர் கார் உற்பத்தியையும் இந்தியாவில் நிறுத்திவிட்டது மிட்சுபிஷி. ஆனால், இதற்கு மாற்று கார் மாடலை எப்போது மிட்சுபிஷி விற்பனைக்கு கொண்டு வரும் என்ற விபரங்கள் குறித்து மிட்சுபிஷி விபரங்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

Most Read Articles
English summary
Mitsubishi India has finally discontinued the production of its Pajero SFX and Lancer diesel sedan in India. 
Story first published: Wednesday, November 14, 2012, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X