2013ல் அறிமுகமாகும் டாப்-5 பட்ஜெட் டீசல் கார்கள்!

இந்த ஆண்டின் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட பெரும்பான்மையான கார் மாடல்கள் அனைத்தும் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. 2013ல் அறிமுகமாகும் கார்கள் குறித்த எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் கார்கள் டீசல் எஞ்சினுடன் அறிமுகப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றன. அதில், மிக முக்கிய மாடல்களாக கருதப்படும் பட்ஜெட் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

மாருதி வேகன்-ஆர் டீசல்

மாருதி வேகன்-ஆர் டீசல்

அடுத்த ஆண்டு மத்தியில் டீசல் வேகன்-ஆர் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. புதிய 1.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வேகன்-ஆர் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புதிய 1.0 லிட்டர் டீசல் எஞ்சினை ஃபியட் வடிவமைத்து வருவதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. புதிய வேகன்-ஆர் டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ வரை மைலேஜ் தரும் என மார்க்கெட் பரபரக்கிறது.

 ஹூண்டாய் ஐ-10 டீசல்

ஹூண்டாய் ஐ-10 டீசல்

மாருதியை போன்று ஹூண்டாயும் தனது பட்ஜெட் மாடல்களை டீசல் எஞ்சினுடன் களமிறக்க மும்முரமாக இறங்கியிருக்கிறது. ஐரோப்பிய சந்தையில் ஐ10 கார் 1.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே டீசல் எஞ்சினை இந்திய மார்க்கெட்டுக்கு தக்கவாறு மாறுதல்களை செய்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐ10 டீசல் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

பிரியோவின் செடான் மாடலான அமேஸ்தான் ஹோண்டாவின் முதல் டீசல் காராக வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய கார் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஸ்விப்ட் டிசையரின் நேரடி போட்டியாளராக பார்க்கப்படுகிறது. தவிர, 2013ம் ஆண்டுக்குள் சிட்டி மற்றும் பிரியோவின் டீசல் மாடல்களை அறிமுகப்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

'குட்டி' வெரிட்டோ

'குட்டி' வெரிட்டோ

தனி நபர் பயன்பாட்டுக்கு ஏற்றதாக 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் காம்பெக்ட் செடான்(சிஎஸ்) என்ற ரகத்தில் குட்டி வெரிட்டோ காரை மஹிந்திரா களமிறக்குகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வர இருக்கும் இந்த புதிய காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மஹிந்திராவின் குறைவான விலை கார் என்ற புதிய முகவரியுடன் களமிறங்க உள்ளது. இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் குட்டி மான்ஸா செடான் காரை களமிறக்க உள்ளது.

 ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக்

ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக்

ஃபியஸ்ட்டா செடான் மாடலை விற்பனை செய்து வரும் ஃபோர்டு நிறுவனம் அடுத்த ஆண்டு ஃபியஸ்ட்டாவின் ஹேட்ச்பேக் மாடலையும் களமிறக்குகிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் வரும் இந்த கார் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மாடலில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. இதேபோன்று, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவியையும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
Most awaited budget diesel cars will be launched by next year. Here are given some of the car models list.
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X