இதுவரை புதிய ஆல்ட்டோவுக்கு 44,000 பேர் முன்பதிவு

Alto 800
அறிமுகம் செய்யப்பட்ட சூட்டோடு சூடாக பெரும் புக்கிங்கை பெற்றதாக கருதப்பட்ட நிலையில், மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 கார் தொடர்ந்து புக்கிங்கில் அசத்தி வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை 44,000 பேர் புதிய ஆல்ட்டோ 800 காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

முற்றிலும் புதிய வடிவமைப்புடன் புத்தம் புது ஆல்ட்டோ காரை மாருதி கடந்த மாதம் மாருதி அறிமுகம் செய்தது. ரூ.2.44 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் வந்த புதிய ஆல்ட்டோ வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அறிமுகம் செய்யப்படும்போது கையில் 10,000 புக்கிங்குகள் என்ற தெம்போடு புதிய ஆல்ட்டோ 800 கார் மார்க்கெட்டுக்கு வந்தது. இந்த நிலையில், விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை புதிய ஆல்ட்டோ காருக்கு 44,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆல்ட்டோ வரிசை கார்களின் வெற்றியை புதிய ஆல்ட்டோ 800 காரும் தொடர்ந்து தக்கவைப்பதாகவே இது இருக்கிறது. புக்கிங் செய்யப்பட்ட கார்களில் இதுவரை 22,000 கார்களை மாருதி டெலிவிரி வழங்கியுள்ளது.

ஆல்ட்டோவுக்கு புக்கிங் குவிந்து வருவதால் உற்பத்தியை அதிகரிப்பது பற்றியும் மாருதி பரிசீலித்து வருகிறது. இதனிடேயே, ஆல்ட்டோ கே-10 காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்யவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Country's largest carmaker Maruti Suzuki India's new Alto 800, which has touched 44,000 bookings within a week of launch, Maruti Suzuki India is looking to cash in on the ongoing festive season sales.
Story first published: Wednesday, November 21, 2012, 9:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X