மஹிந்திரா பேண்டீரோ(ஸ்டாலியோ) ஸ்பை ஷாட்ஸ்!

கியர் பாக்ஸ் பிரச்னையால் உற்பத்தி நிறுத்தப்பட்ட ஸ்டாலியோ பைக்கை பேண்டீரோ என்ற பெயரில் மஹிந்திரா மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தோம். வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய பேண்டீரோவின் சோதனை ஓட்டத்தின்போது ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை வாசகர்கள் பார்வைக்கு தருகிறோம்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. கியர்பாக்ஸில் இருந்த தொழில்நுட்ப பிரச்னை இத்தாலிய நிறுவனத்துடன் சரிசெய்திருக்கிறது மஹிந்திரா.

 எஞ்சின் திறன்

எஞ்சின் திறன்

பேண்டீரோவில் 7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 106.7 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

கியர் பாக்ஸ் பிரச்னை

கியர் பாக்ஸ் பிரச்னை

கடந்த 2010ம் ஆண்டு 110 சிசி ரகத்தில் ஸ்டாலியோ நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், கியர் பாக்ஸில் தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஏன் பெயர் மாற்றம்

ஏன் பெயர் மாற்றம்

இருசக்கர வாகன விற்பனையில் பெரும் எதிர்பார்ப்புடன் இறங்கிய மஹிந்திராவின் முதல் பைக் ஸ்டாலியோதான். தொழில்நுட்ப பிரச்னை காரணமாக ஸ்டாலியோ மீதான நம்பிக்கை போனதால் தற்போது அதே பைக்கை வேறு பெயரில் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வருகிறது.

Spy images source: Bikeadvice.in

Most Read Articles
English summary
Mahindra 2 Wheelers had previously stated that it would relaunch the Stallio but with all the bad press around the Stallio name, it appears that Mahindra has decided to not to use the Stallio name. Here are the Mahindra Pantero Spy Shots revealed by Bikeadvice.in.
Story first published: Tuesday, November 13, 2012, 15:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X