டொயோட்டா இன்னோவா vs நிசான் எவாலியா: ஓர் ஒப்பீட்டு அலசல்

புதிய போட்டியாளர்கள் வந்தாலும் எம்பிவி மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா வலுவான இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. சொகுசு, பெர்ஃபார்மென்ஸ், டிசைன் எல்லாவற்றிலும் இன்னோவா முத்திரை பதித்த மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், இன்னோவாவுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் எவாலியா காரை நிசான் களமிறக்கியுள்ளது.

அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின், தாராள இடவசதி உள்ளிட்ட அம்சங்களை கூடுதல் பலமாக கொண்டு இறங்கியுள்ளது எவாலியா. விலை, எஞ்சின், இடவசதி உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு டொயோட்டா இன்னோவா மற்றும் நிசான் எவாலியா எம்பிவி கார்களின் சாதக, பாதகங்களை இந்த செய்தித்தொகுப்பில் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

தோற்றம்

தோற்றம்

மார்க்கெட்டில் வந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னோவா டிசைனை புறந்தள்ளிவிட முடியாது. ஆனால், எவாலியாவின் முன்பக்கம் சுமார், பக்கவாட்டு தோற்றம் பரவாயில்லை, பின்புற டிசைன் வேஸ்ட்.. என்றுதான் கூற முடியும். மொத்ததில் எவாலியா ஒரு மினி வேன். டிசைனை பொறுத்தவரையில் இன்னோவா எளிதாக ஸ்கோர் செய்து விடுகிறது.

எஞ்சின் ஒப்பீடு

எஞ்சின் ஒப்பீடு

ரினால்ட், நிசான் கூட்டணியின் பல கார்களுக்கு உயிர்கொடுத்து வரும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின்தான் எவாலியாவில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. சிறப்பான ஆற்றல் வெளிப்பாடு, அதிக மைலேஜ் ஆகியவை எவாலியாவுக்கு கூடுதல் பலம். ஆனால், இன்னோவாவில் 102 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டது என்று பெயர் வாங்கியுள்ளது.

மைலேஜ் ஒப்பீடு

மைலேஜ் ஒப்பீடு

நெடுஞ்சாலை மற்றும் தினசரி பயன்பாடு என ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எவாலியா லிட்டருக்கு 16.5 கிமீ மைலேஜையும், இன்னோவா லிட்டருக்கு 11.8 கிமீ மைலேஜையும் தரும். மைலேஜ் விரும்பிகளுக்கு எவாலியா நல்ல தேர்வாக இருக்கும்.

 ஆற்றல் வெளிப்பாடு

ஆற்றல் வெளிப்பாடு

இன்னோவாவைவிட எவாலியா 200 கிலோ எடை குறைவான கார். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு எவாலியா 14.3 வினாடிகளையும், இன்னோவா 17.6 வினாடிகளையும் எடுத்துக் கொள்கின்றன. வேகமெடுத்து செல்லும்போது இன்னோவா சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இருப்பது நிதர்சனம்.

கையாளுமை

கையாளுமை

எவாலியா குறைந்த டர்னிங் ரேடியஸ் கொண்டது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் எவாலியா சிறந்த கையாளுமை கொண்டதாக இருக்கும். அதேவேளை, இன்னோவாவும் சிறந்த கையாளுமை கொண்ட கார் என்றாலும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு மிகச்சிறந்த கார். எனவே, உங்களது பயன்பாட்டை பொறுத்து தேர்வு செய்ய வேண்டும்.

 சொகுசு

சொகுசு

இன்னோவாவின் மிகப்பெரிய பலமே சொகுசான வடிவமைப்பு கொண்ட இருக்கைகள்தான். இதனாலேயே, லட்சக்கணக்கானோர் மனதில் இன்னோவா சிம்மாசனம் போட்டுள்ளது. குறைந்த தூரமோ, நீண்ட தூர பயணமோ எதுவாயினும் அதிர்வுகள் இல்லாமல் செல்வதற்கு இன்னோவாவுக்கு போட்டியாளர் இல்லை. குறைந்த தூர பயணங்களுக்கு எவாலியா ஒகே. ஆனால், நீண்ட தூர பயணங்களில் இன்னோவா அளவுக்கு சொகுசான பயண அனுபவத்தை எவாலியாவால் தர முடியாது.

இடவசதி: எவாலியா

இடவசதி: எவாலியா

பின்புறம் பாக்ஸி டைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், எவாலியாவின் மூன்றாவது வரிசை இருக்கையில் உயரமானவர்கள் கூட சவுகரியமாக அமரும் வகையில் சிறந்த ஹெட்ரூமை கொண்டிருக்கிறது.

 இடவசதி: இன்னோவா

இடவசதி: இன்னோவா

இன்னோவா மிக தாராள இடவசதியை வழங்குகிறது. எவாலியா அளவுக்கு மூன்றாவது வரிசை இல்லாவிட்டாலும் சராசரியான உயரம் கொண்டவர்களுக்கு சிறந்த இடவசதியை கொண்டிருக்கிறது. ஹெட்ரூமை சிறந்ததாக கூற முடியாவிட்டாலும் லெக்ரூம் சிறப்பாக இருப்பதை கூறியாக வேண்டும். மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு பெஞ்ச் இருக்கைகளுக்கு பதிலாக கேப்டன் இருக்கைகளை ஆப்ஷனலாக இன்னோவாவுக்கு வழங்குகிறது டொயோட்டா.

லக்கேஜ் ரூம்

லக்கேஜ் ரூம்

எம்பிவி கார்களில் இருக்கைகள் பெரும்பான்மையான இடத்தை அடைத்துக் கொள்ளும். எனவே, இந்த வகை கார்களில் பொருட்களை வைப்பதற்கான இடவசதி மிகவும் முக்கிய அம்சம். அந்த வகையில், பொருட்களை வைப்பதற்கான இடவசதி ரேஸில் எவாலியா வெற்றி பெற்றுவிடுகிறது. அதிக பொருட்களை வைப்பதற்கான தாராள இடவசதியை எவாலியா வழங்குகிறது. மேலும், இரண்டு கார்களிலுமே மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கி விரிக்கும் வசதிகொண்டிருக்கின்றன. எனவே, அதிக பொருட்களை எடுத்து செல்ல வேண்டியிருந்தால் லக்கேஜ் ரூமை விரிவுப்படுத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது.

 உட்புற அம்சங்கள்

உட்புற அம்சங்கள்

எவாலியாவின் டாப் என்ட் மாடலில் ரியர் பார்க்கிங் சென்சார், ஏர்பேக்ஸ், மியூசிக் சிஸ்டம் ஆகியவை ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக கிடைக்கிறது. ஆனால், இன்னோவாவுடன் எவாலியாவை ஒப்பிட முடியாது. உட்புற வடிவமைப்பிலும் சரி, வசதிகள் மற்றும் இதர அம்சங்களிலும் சரி, ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது இன்னோவா. இதில், எவாலியாவுக்கு இரண்டாவது இடம்தான்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

இந்தியாவில் ஒரு கார் மாடல் வெற்றிபெறுவதற்கு விலையும் முக்கிய காரணியாக இருக்கிறது. இதை மனதில் வைத்து இன்னோவாவைவிட குறைந்த விலையில் எவாலியாவை களமிறக்கி இருக்கிறது நிசான். ரூ.8.78 லட்சம் முதல் ரூ.10.73 லட்சம் விலையில் எவாலியா விற்பனை செய்யப்படுகிறது. இன்னோவா ரூ.9.51 லட்சம் விலையில் ஆரம்பமாகி ரூ.15.06 லட்சம் விலை வரை மொத்தம் 23 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. (அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாக கொண்டது). இன்னோவாவின் பேஸ் அல்லது நடுத்தர வேரியண்ட் விலையிலேயே எவாலியா டாப் வேரியண்ட் கிடைக்கிறது.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

அதிக மைலேஜ், குறைவான விலை, எளிதான கையாளுமை, அதிக இடவசதி வேண்டுவோர்க்கு எவாலியா பெஸ்ட் எம்பிவி. அதேவேளை, சொகுசு அம்சங்களையும், டிசைனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இன்னோவாதான்.

Most Read Articles
English summary
The Innova now has some Japanese competition to consider. Nissan Evalia the latest MPV to enter the Indian car market has been designed as a direct competitor of the Toyota Innova. We will compare the two MPVs on the basis of price, space, performance, handling and comfort.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X