மேம்படுத்தப்பட்ட புதிய ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார்: நிசான் அறிமுகம்

உலக அளவில் அதிகம் விரும்பப்படும் ஸ்போர்ட்ஸ் காராக நிசான் ஜிடி-ஆர் திகழ்கிறது. ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் முதல் நம்மூர் சச்சின் வரை அனைவரும் இந்த காரின் மீது அப்படியொரு தீராத காதல். தனது ஃபெராரி காரையே விற்றுவிட்டு கடந்த ஆண்டு இந்த காரை சச்சின் வாங்கியது நினைவிருக்கலாம். ஏனெனில், இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் உலக அளவில் பேசப்படும் ஒன்று.

கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பவர்ஃபுல் ஸ்போர்ட்ஸ் காரை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது நிசான். அந்த வகையில் தற்போது புதிய அம்சங்களுடன் கூடிய 2014 ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது நிசான். குறிப்பாக, புதிய ஜிடி-ஆரின் எஞ்சினில் மாற்றங்களை செய்துள்ளது நிசான். ஸ்லைடரில் புதிய ஜிடி-ஆர் காரின் படங்களுடன் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

ஜப்பான் மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் அடுத்த ஆண்டு பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புற சஸ்பென்ஷனில் சில மாற்றங்களை செய்து மேம்படுத்தியிருக்கிறது நிசான். இதனால், கையாளுமையில் வெகு ஜோராக இருக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

டூயல் டோன் இன்டிரியருடன் மாற்றம் கண்டுள்ள ஜிடி-ஆர்.

கூடுதல் பவர்

கூடுதல் பவர்

அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் இன்ஜெக்டர்களுடன் கூடிய 3.8 லிட்டர் வி6 எஞ்சின் தற்போது ஜிடி-ஆரை மேலும் பவர்ஃபுல் காராக மாற்றியிருக்கிறது. 530 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்திய எஞ்சின் தற்போது 545 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் டியூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

சமநிலை

சமநிலை

சேஸிஸ் மேம்படுத்தப்பட்டிருப்பதால் புதிய ஜிடிஆர் மிகுந்த சமநிலை கொண்டதாக மாறியிருக்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

கார்பன் ஃபைபர் ரியர் ஸ்பாய்லர், ரியர் வியூ மானிட்டர், இரட்டை வண்ண இன்டிரியர் உள்ளிட்ட ஏராளமான புதிய அம்சங்களுடன் வர இருக்கிறது புதிய நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் கார்.

Most Read Articles
மேலும்... #nissan #gtr #auto news #நிசான்
English summary
Nissan has revealed the 2014 GT-R sports car in Japan recently . The new GT-R may look identical from the outside, it's significantly revised on the interior and engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X