பாரிஸ் தீயணைப்பு படையில் ரெனோ ட்விஸி எலக்ட்ரிக் கார்

தீயணைப்பு உபகரணங்களுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்விஸி எலக்ட்ரிக் காரை சோதனை செய்வதற்காக பாரிஸ் தீயணைப்பு படை வசம் ரினால்ட் வழங்கியிருக்கிறது. சோதனைகளில் வெற்றி பெற்றால் அதிகளவில் ட்விஸி எலக்ட்ரிக் கார்களை தீயணைப்புப் படையில் சேர்க்க பாரிஸ் தீயணைப்பு படையினர் முடிவு செய்துள்ளனர். தீயணைப்பு படையில் சேர்ந்திருக்கும் ரினால்ட் ட்விஸியின் பிரத்யேக அம்சங்கள் குறித்து ஸ்லைடரில் காணலாம்.

ட்விஸியின் முக்கிய அம்சம்

ட்விஸியின் முக்கிய அம்சம்

1.2 மீட்டர் மட்டுமே நீளம் கொண்டதால் போக்குவரத்து நெரிசலிலும், குறுகிய சாலைகளிலும் எளிதாக சென்று தீயணைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

தீயணைப்பு உபகரணங்கள்

தீயணைப்பு உபகரணங்கள்

2 இருக்கைகள் கொண்ட இந்த காரில் பின் இருக்கையை எடுத்துவிட்டு தீயணைப்பு கருவி, பிராண வாயு கலன், பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் மற்றும் முதலுதவி பெட்டி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

சோதனை காலம்

சோதனை காலம்

இந்த மாதம் துவங்கி மொத்தம் 8 மாதங்கள் இந்த கார் தீயணைப்பு துறையில் செயல்படும் விதங்கள் குறித்து சோதனைகள் நடத்தப்பட உள்ளது. தீயணைப்புக்கு மட்டுமின்றி விழாக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளது.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 80 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டிரைவருக்கு ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. இதன் ரகத்தை சேர்ந்த பிற கார்களில் இவை இருக்காது.

எவ்வளவு தூரம் செல்லும்?

எவ்வளவு தூரம் செல்லும்?

ஒருமுறை 3 மணி நேரம் முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 80 கிமீ முதல் 100 கிமீ வரை செல்லும் என்கிறது ரினால்ட். இந்த எலக்ட்ரிக் காரை இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ரினால்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The firefighter brigade will use the all-electric urban vehicle as an early intervention tool.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X