ஒரே மாதத்தில் 117 கார்களை விற்று போர்ஷே அசத்தல்!

Cayenne SUV
அக்டோபரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் 117 சொகுசு கார்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது போர்ஷே.

ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் பிரிமியம் எஸ்யூவி தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த போர்ஷே பிரபலமாக விளங்குகிறது. கடந்த ஏப்ரலில்தான் இந்திய மார்க்கெட்டில் முறைப்படி நுழைந்தது. ஆனால், பிற பிரிமியம் பிராண்டுகளை விட போர்ஷே வெகு சீக்கிரமாக பிரபலமாகி வருகிறது.

இதற்கு அத்தாட்சியாக கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் விற்பனை தாறுமாறாக உயர்ந்தது. இதுகுறித்து போர்ஷே இந்தியா நிர்வாக இயக்குனர் அனில் ரெட்டி கூறுகையில்," மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்து குறுகிய காலத்திலேயே ஒரு மாதத்தில் 117 கார்களை விற்பனை செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் விதத்தில் எங்களது டீலர்ஷிப் மற்றும் சர்வீ்ஸ் நெட்வொர்க்குகளை விரிவுப்படுத்த உள்ளோம். நாட்டின் முக்கிய நகரங்களில் விரைவில் புதிய டீலர்ஷிப்புகள் துவங்கப்பட உள்ளது," என்றார்.

கடந்த மாதம் விற்பனை தாறுமாறாக உயர்ந்ததால் உற்சாகமடைந்துள்ள போர்ஷே அடுத்து இரண்டு புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
German premium car maker Porsche starts its record breaking operations with 117 cars sold within a month in October 2012.
Story first published: Wednesday, November 21, 2012, 15:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X