'காப்பி'யடிப்பதை விடுவதற்கு ரெனோ-நிசான் முடிவு

நிசான்-ரெனோ
ரீபேட்ஜ் செய்யும் வர்த்தக கொள்கையை விட்டுவிட்டு சொந்தமாக புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ரினால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செலவீனத்தை குறைப்பதற்காக கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். மேலும், ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை சில மாறுதல்களுடன் ரீபேட்ஜ் செய்து விற்பதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், ஜப்பானிய நிறுவனமான நிசானும், பிரான்சு நிறுவனமான ரினால்ட்டும் சர்வதேச அளவில் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன.

இந்தியாவில் இரு நிறுவனங்களும் ஒரே ஆலையில் கார்களை உற்பத்தி செய்தாலும், ஒரே மாடல்களை வேறு வேறு பெயர்களில் தனித்தனி டீலர் நெட்வொர்க்கை அமைத்து விற்பனை செய்து வருகின்றன. நிசான் மைக்ராவை பல்ஸ் என்றும், சன்னியை ஸ்கேலா என்றும் ரினால்ட் ரீபேட்ஜ் செய்து விற்று வருகிறது. இதேபோன்று, டஸ்ட்டர் எஸ்யூவியை ரீபேட்ஜ் செய்யும் முயற்சிகளை நிசான் துவங்கியிருக்கிறது.

இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் வலுப்பெறுவதற்கு தனித்தனியாக புதிய மாடல்களை களமிறக்குவதே ஒன்றே சிறந்த வழி என்று இரு நிறுவனங்களும் புரிந்துகொண்டுள்ளன.

எனவே, ரீபேட்ஜ் செய்வதை விட்டுவிட்டு இரு நிறுவனங்களும் இந்தியாவில் சொந்தமாக முற்றிலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த புதிய வர்த்தக கொள்கைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிசான்-ரினால்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Renault and Nissan have adopted a new strategy in India to gain more success and sales. The two companies have chosen to develop exclusive products instead of creating copy cats.
Story first published: Thursday, November 15, 2012, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X