பிரான்ஸ் கார் ஆலைகளில் சூரிய மின் உற்பத்தி மையத்தை அமைத்த ரெனோ!

ஆட்டோமொபைல் துறையிலேயே மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி மையத்தை ரினால்ட் கார் நிறுவனம் அமைத்திருக்கிறது. பிரான்சில் உள்ள அந்த நிறுவனத்தின் 6 கார் ஆலைகளில் 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் சூரிய மின் உற்பத்திக்கான சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சோலார் பேனல்களின் கீழே ஆலைகளில் இருந்து உற்பத்தியாகி வெளிவரும் கார்களை நிறுத்தி வைக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் ஆலைகளுக்கு தேவையான மின்சாரத்தை சொந்தமாக உற்பத்தி செய்வதோடு, புதிய கார்களையும் பாதுகாத்து வைக்க முடியும்.

மின் உற்பத்தி திறன்

மின் உற்பத்தி திறன்

ரினால்ட் அமைத்திருக்கும் சோலார் பேனல்கள் 59 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம்

ஸ்பெயின் மற்றும் தென்கொரியாவில் உள்ள தனது ஆலைகளில் 25 ஏக்கரில் இதேபோன்று சூரிய மின் உற்பத்திக்காக சோலார் பேனல்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறது ரெனோ. அடுத்து ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள ஆலைகளிலும் சோலார் பேனல்களை அமைக்க உள்ளது.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்த கார்கள் சோலார் பேனல்களுக்கு கீழே நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, பணியாளர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாபெரும் முன்னோடி திட்டம்

மாபெரும் முன்னோடி திட்டம்

ஆட்டோமொபைல் துறையிலேயே மிகப்பெரிய முன்னோடி சூரிய மின் உற்பத்தி திட்டமாக கருதப்படுகிறது.

மஹிந்திரா ரேவா ஆலையிலும் வசதி

மஹிந்திரா ரேவா ஆலையிலும் வசதி

நம் நாட்டிலுள்ள சில கார் ஆலைகளில் சிறிய அளவில் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பெங்களூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட மஹிந்திரா ரேவாவின் புதிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையிலும் சூரிய உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஆலைக்கு தேவையான 35 விழுக்காடு மின்சாரத்தை பெற முடியும்.

Most Read Articles
English summary
French car maker Renault is inaugurating 40 hectares of solar panels simultaneously at six of its French production sites. The initiative further confirms Renault’s environmental commitment and is also an innovative way of protecting new vehicles before they leave plants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X