சீனாவில் புதிய சுஸுகி ஜிப்ஸி அறிமுகம்: இந்தியாவுக்கு..?

சீனாவில் மேம்படுத்தப்பட்ட ஜிம்னி மினி எஸ்யூவியை சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. பார்க்க மாருதி ஜிப்ஸி போன்றே இருக்கும் இந்த மினி எஸ்யூவி மேம்படுத்தப்பட்டுள்ளதால், நம் நாட்டு மார்க்கெட்டிலும் ஜிப்ஸியை மேம்படுத்தி மாருதி அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட ஜிம்னி மினி எஸ்யூவி 4 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ12.2 லட்சம் முதல் ரூ.13.6 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய மினி எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது.

Suzuki Jimny

இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கிறது.

மேலும், ஆஃப் ரோடுகளில் அனாயசமாக செல்லும் விதத்தில் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. பழைய மாடலை விட 30 மிமீ கூடுதல் நீளத்தை பெற்றிருக்கிறது.

முகப்பு உள்ளிட்ட வெளிப்புற வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், உட்புறத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மினி எஸ்யூவியாக இது களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் ஜிம்னி எஸ்யூவி மேம்படுத்தப்பட்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதியின் ஜிப்ஸியும் மாற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

ஏனெனில், நீண்ட காலமாக ஜிப்ஸி எந்த மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, மாற்றங்கள் செய்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் ஜிப்ஸியின் விற்பனை எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Suzuki has launched the face-lifted version of its mini SUV the Jimny. The Jimny looks very much similar to the Maruti Suzuki Gypsy. The face-lifted Jimny is available in four variants and is priced between Rs.12.2 lakhs and 13.6 lakhs. The price is comparatively higher than the Jimny's price in Japan as China imposes high taxes on imported cars.
Story first published: Monday, July 16, 2012, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X