பீஜோவுடன் கூட்டணி: டாடா மோட்டார்ஸ் அடியோடு மறுப்பு

Tata Motors Logo
பிரெஞ்ச் கார் தயாரிப்பாளர் பீஜோ நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக வெளியான தகவல்களை டாடா மோட்டார்ஸ் அடியோடு மறுத்துள்ளது.

பிரான்சை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், பீஜோ திடீர் நிதி நெருக்கடியில் சிக்கியதால் ஜெனரல் மோட்டார்ஸ் உடனான பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டுள்ளது.

ஜெனரல் மோட்டார்சை தவிர்த்து பிற நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக பீஜோ நிறுவனத்தின் தலைவர் பிலிப் வாரின் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க பீஜோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரான்சிலிருந்து வெளிவரும் 'மேனேஜர் மேகஸின' என்ற இதழில் செய்தி வெளியிடுப்பட்டிருந்தது.

ஆனால், இந்த தகவலை டாடா மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர் தேபசிஸ் ரே அடியோடு மறுத்துள்ளார். அந்த செய்தியில் துளியும் உண்மையில், டாடா மோட்டார்ஸ் பற்றி தெரிவிக்கப்பட்டிருப்பதால் இந்த விளக்கத்தை அளிப்பதாக அவர் கூறியிருக்கிறார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதன் காரணமாக குஜராத்தில் ரூ.5,000 கோடியில் புதிய கார் ஆலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Tata Motors has denied reports about plans of tying up with European car group PSA Peugeot Citroen. The company's spokesperson Debasis Ray has described reports about the two companies being in talks over an alliance were 'absolutely incorrect'.
Story first published: Thursday, November 15, 2012, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X