அடுத்த ஆண்டு மினி சுமோ, மினி ஆரியாவை களமிறக்கும் டாடா

5 பேர் செல்லத்தக்க யுட்டிலிட்டி ரக பயணிகள் வாகனங்களுக்கு அதிக டிமான்ட் இருக்கிறது. இதை குறிவைத்து பல நிறுவனங்கள் புதிய மாடல்களை அடுத்தடுத்து களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய மாடல்களை களமிறக்க உள்ளன.

அடுத்த ஆண்டு 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மினி சுமோ காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது. இதேபோன்று, மினி ஆரியாவையும் டாடா அறிமுகப்படுத்துகிறது. மஹிந்திரா குவான்ட்டோ மார்க்கெட்டை குறிவைத்து மினி சுமோவையும், மாருதி எர்டிகா மார்க்கெட்டை குறிவைத்து மினி ஆரியாவையும் நிலை நிறுத்த டாடா முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

சுமோ மற்றும் ஆரியா கார்களின் பின் வரிசையை எடுத்துவிட்டு 4 மீட்டருக்கும் குறைவாக வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் குவான்ட்டோ, எர்டிகா உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் விலையில் இந்த புதிய கார்களை இறக்கிவிட டாடா முடிவு செய்துள்ளது.

டிசைன் டீம்

டிசைன் டீம்

டாடாவின் ஐரோப்பிய வடிவைப்பு மையமும், இந்திய வடிவமைப்பு பொறியாளர்களும் இணைந்து இந்த புதிய காம்பெக்ட் மாடல்களை வடிவமைத்து வருகின்றனர்.

அலாய் வீல்

அலாய் வீல்

குவான்ட்டோ போன்று அலாய் வீல்களுடன் மினி சுமோ வரும் என தெரிகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

மினி சுமோ மற்றும் மினி ஆரியா கார்கள் 5 பேர் பயணம் செய்யும் வசதியுடன் வருகிறது. ஆரியாவில் சிறுவர்கள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கை வசதியை கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

மினி சுமோ மற்றும் மினி ஆரியாவில் ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அல்லது டாடாவின் 2.2 லிட்டர் டிகோர் எஞ்சினில் மாறுதல்களை செய்து பொருத்த டாடா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மினி சுமோவை ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலையிலும், மினி ஆரியாவை ரூ.7 லட்சம் விலையிலும் களமிறக்க டாடா முடிவு செய்து வைத்திருப்பதாக ஆட்டோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

தனி நபர் மார்க்கெட்டை குறிவைத்து வருவதால் இன்டிரியரில் கூடுதல் அம்சங்களுடன் களமிறக்க டாடா திட்டமிட்டிருக்கிறது.

தினசரி பயன்பாடு

தினசரி பயன்பாடு

தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதிக மைலேஜ், போக்குவரத்து நெரிசலில் எளிதாக செல்லும் வகையிலும், பார்க்கிங் செய்ய ஏதுவாகவும் புதிய காம்பெக்ட் கார்கள் இருக்கும் என டாடா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரியா சேஸிஸ்

ஆரியா சேஸிஸ்

ஆரியா தற்போது ஹைட்ரோ லேடர் சேஸிஸில் தயாரிக்கப்படுகிறது. எனவே, தயாரிப்பு செலவீனத்தை குறைப்பதற்கு லேடர் சேஸிஸில் புதிய மினி ஆரியாவை வடிவமைக்க டாடா முடிவு செய்துள்ளது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

அடுத்த ஆண்டு பிற்பாதியில் ஆரியாவையும், அதைத்தொடர்ந்து மினி சுமோவையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Tata motors is developing a compact version of the Aria and Sumo. The new products will be available second half of next year,says reports.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X