அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்த டாடாவும் களமிறங்கியது?

Aston Martin Vanquish
அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளதாக பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கையான பர்மிங்ஹாம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் சினிமா புகழ் அஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனத்தின் 64 விழுக்காடு பங்குகளை குவைத் நாட்டை சேர்ந்த இன்வெஸ்ட்மென்ட் தார் கோ., நிறுவனம் வசம் இருக்கிறது. இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் பங்குகளை தார் கோ., நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விற்பனையை வெற்றிகரமாக முடித்து தருவதற்கு ரோத்சைல்டு என்ற நிறுவனத்தை தார் கோ., நிறுவனம் நியமித்திருக்கிறது.

இதுதொடர்பாக, அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தில் முதலீடு செய்ய தகுதியான நிறுவனங்களே தேர்ந்தெடுத்து அந்த நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு ரோத்சைல்டு நிறுவனம் பேச்சுவார்ச்சை நடத்தி வருகிறது. அதில், இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டினை கையகப்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் முயற்சிகளை எடுத்து வருவதாக பர்மிங்ஹாம் போஸ்ட் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருக்கிறது.

கடந்த 2008ல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஆகிய உலக புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது. தற்போது இரு நிறுவனங்களும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியிருக்கின்றன. இதேமுறையில், தற்போது அஸ்டன் மார்ட்டின் பிராண்டை கையகப்படுத்தும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் இறங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Aston Martin’s shareholder, Investment Dar Co., has approached potential buyers for the maker of luxury sports cars featured in James Bond movies, said close sources with knowledge of the matter. Tata can be one of the possible buyers of Aston Martin. In case the company is seriously considering buying Aston Martin, the one question it needs to answer itself is what will it gain by doing it.
Story first published: Saturday, November 17, 2012, 15:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X