டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் புதிய ஃபியட் லீனியா

By Saravana

பல ஆண்டுகள் கழித்து ஃபியட் லீனியா ரசிகர்களுக்கு ஓர் நல்ல செய்தி. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட லீனியா காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபியட் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் விற்பனைக்கு வந்த லீனியாவில் இதுவரை பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட் லீனியாவை ஃபியட் அறிமுகம் செய்வது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

புதிய முகம்

புதிய முகம்

புதிய லீனியா குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், சோதனை ஓட்டப் படங்களை வைத்து பார்க்கும்போது, கிரில், பம்பர், ஏர்டேம், பனி விளக்கு அறை என முகப்பில் அனைத்தும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பின்புற மாற்றம்

பின்புற மாற்றம்

பின்புறத்தில் பதிவெண் பலகை மட்டும் பம்பரிலிருந்து இடம் பெயர்ந்து பூட் லிட்டுக்கு தாவியுள்ளது. தவிர, வெளிப்புறத்தில் அதிக அளவில் குரோமிய வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

தற்போதைய மாடலைவிட அதிக பிரிமியம் அம்சங்கள் கொண்டதாக இன்டிரியர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக, டேஷ்போர்டு டிசைன் முற்றிலுமாக மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது.

அப்போ கிளாசிக்

அப்போ கிளாசிக்

புதிய 2014 மாடல் ஃபியட் லீனியா விற்பனைக்கு வந்தாலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வசதிகள் குறைக்கப்பட்ட லீனியா கிளாசிக் கார் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Italian automaker will be launching the facelifted version of the Linea in India in 2014, with the reveal scheduled for the Auto Expo which will take place in February.
Story first published: Tuesday, November 19, 2013, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X