இதுதாங்க புதிய மினி கார்... முழு விபரத்தையும் பார்த்துடுவோமா!

புதிய மினி கார் குறித்து ஆட்டோமொபைல் இணையதளங்களில் நாளொரு வண்ணம் தகவல்களும், படங்களும் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்தநிலையில், இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு ஆலையில் நடந்த விழாவில் 2014 மாடலாக வரும் புதிய மினி கார் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது.

கன்வெர்ட்டிபிள், கிளப்மேன், கன்ட்ரிமேன், பேஸ்மேன், கூபே மற்றும் ரோட்ஸ்டெர் ஆகிய பல வடிவமைப்பு ரகங்களில் மினி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மினி பிராண்டின் அடிப்படை மாடலாக கருதப்படும் ஹார்டு டாப் கூபே மாடலான கூப்பர் கார்தான் தற்போது அறிமுமாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மினி கூப்பர் காராக விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் தொடர்ந்து பல்வேறு ரக வடிவமைப்பு வகைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய மினி காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கொஞ்சம்

கொஞ்சம்

தற்போதைய மாடலைவிட புதிய மினி கார் 98 மிமீ கூடுதல் நீளம், 28 மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டதாக வந்துள்ளது. அகலத்தில் 44 மிமீ, உயரத்தில் 7 மிமீ கூடியுள்ளது. மேலும், பூட்ரூம் 50 லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டு தற்போது 211 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூமுடன் புதிய மினி கார் வருகிறது.

மாற்றம்

மாற்றம்

புதிய மினி காரின் வெளிப்புறத் தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஏனெனில், இந்த டிசைனில் கைவைத்தால் அதன் அழகு நிச்சயம் கெட்டுப் போய்விடும் என்பதை உணர்ந்து மிக எச்சரிக்கையாக இருந்துள்ளனர் மினி பிராண்டின் எஞ்சினியர்கள்.

புதிது..

புதிது..

முகப்பு கிரில்லை சற்றே பெரிதாக்கியுள்ளனர். ஹெட்லைட் டிசைனிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் ஹெட்லைட்டை சுற்றி வழக்கமான இடத்தில் வளையம் போல் பொருத்தியுள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரில்தான் அதிக மாற்றங்களை செய்துள்ளனர். டயல்கள் மற்றும் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் இடம் மாற்றப்பட்டுள்ளன. பவர் விண்டோஸ் சுவிட்சுகள் தற்போது கதவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

டயல்

டயல்

மினி காரின் இன்டிரியரை அலங்காரமாக காண்பிப்பதில், அதன் கடிகாரம் அளவிலான டயல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரை வட்ட வடிவிலான எல்இடி விளக்கு டயலை அலங்கரிக்கிறது. இதுதவிர, டிரைவிங் ஆப்ஷன்களுக்கு தக்கவாறு இந்த விளக்கின் நிறம் மாறும். சாட் நவ் நேவிகேஷன் சிஸ்டத்தில் கார் இருக்கும் இடத்தை துல்லியமாக டயல் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

 பார்க்கிங்

பார்க்கிங்

பார்க்கிங் செய்யும்போதும் டயலில் இருக்கும் எல்இடி விளக்குகள் வண்ணத்தை மாற்றி எச்சரிக்கை செய்யும்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

பிஎம்டபிள்யூவின் புதிய யுகேஎல் - 1 பிளாட்ஃபார்மில்தான் புதிய மினி கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில்தான் அடுத்து வர இருக்கும் புதிய மினி கார்களும் வடிவமைக்கப்படும்.

எஞ்சின்

எஞ்சின்

3 சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல், 4 சிலிண்ட்ர் 2.0 லி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3 சிலிண்டர் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் புதிய மினி கார் கிடைக்கும். அனைத்து எஞ்சின்களும் மினி நிறுவனத்தின் ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பத்தையும், டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

பவர்

பவர்

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 134 பிஎச்பி ஆற்றலையும், 219 என்எம் டார்க்கையும் கொண்டிருக்கும். இந்த மாடல் 0- 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் கடந்துவிடும்.

மினி கூப்பர் டீசல்

மினி கூப்பர் டீசல்

மினி கூப்பர் டீசல் மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் 114 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த மாடல் 0- 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டிவிடும்.

 பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 189 எச்பி ஆற்றலையும், 280 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த மாடல் 0- 100 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் தொட்டுவிடும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

புதிய மினி காரில் 3 விதமான 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்களும், ஒரு ஆட்டோமேட்டிக் மாடலிலும் வருகிறது. தவிர, டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மாடலும் உண்டு.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அடுத்த தலைமுறை பாதுகாப்பு வசதிகள் புதிய மினி காரில் வருகிறது. பாதசாரிகளை கண்டுணர்ந்து எச்சரிக்கும் வசதி, மோதல் தடுப்பு தொழில்நுட்பம், பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அவற்றில் சில.

விலை

விலை

அடுத்த ஆண்டு மார்ச் முதல் இங்கிலாந்தில் புதிய மினி கூப்பர் விற்பனைக்கு வர இருக்கிறது. கூப்பர் மாடல் 15,300 பவுண்ட் விலையிலும், கூப்பர் டி மாடல் 16,450 பவுண்ட் விலையிலும், கூப்பர் எஸ் மாடல் 18,650 பவுண்ட் விலையிலும் வர இருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மினி கார் இந்திய மார்க்கெட்டுக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Most Read Articles

English summary
After being revealed through leaked images dozens of times the all new, third generation Mini Cooper has been officially unveiled. The unveiling took place at Mini's Cowley manufacturing plant in Oxford, UK.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X