நிசான் ஜிடி-ஆரின் புதிய 'காட்ஸில்லா' மாடல் அறிமுகம்!!

நிஸ்மோ பாடி கிட் பொருத்தப்பட்ட நிசான் ஜிடி ஆர் காரின் அதிசக்திவாய்ந்த புதிய கார் மாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. நர்பர்க்கிரிங் ஓடுதளத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் ஒரு சுற்றை 7:08.679 நிமிடங்களில் கடந்தது.

இந்த கார் நிசான் ஜிடி ஆர் நிஸ்மோ ஜிடி3 ரேஸ் காரைப் போன்றே தோற்றத்தில் பல ஒற்றுமைகளை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாளரே இல்லை என நிசான் பெருமையடித்துள்ளது. இந்த காரின் படங்கள், நர்பர்க்கிரிங் ஓடுதளத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையின் வீடியோ ஆகியவற்றை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

எஞ்சின் ட்யூனிங்

எஞ்சின் ட்யூனிங்

இந்த காரில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை எஞ்சினிலிருந்து துவங்கலாம். 3.8 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு எஞ்சினில் ரேஸ் கார் எஞ்சின் போன்று ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

 பவர்

பவர்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 600 எச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 சேஸீ

சேஸீ

இந்த காரின் சேஸீயும் மேம்படுத்தப்பட்டிருப்பதால், அதிர்வுகளும், சப்தங்களும் குறைவாக இருக்கும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த காருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிலிஸ்டெய்ன் டேம்ப்ட்ரோனிக் டேம்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அதிக நிலைத்தன்மையையும், சிறப்பான கையாளுமையையும் வழங்கும்.

நிஸ்மோ பாடி கிட்

நிஸ்மோ பாடி கிட்

அகலமாக்கப்பட்ட முன்பக்க பம்பர்கள், ஏர் ஸ்பிளிட்டர்கள், எஞ்சின் அன்டர்கவர், ரியர் ஸ்பாய்லர்கள் ஆகியவற்றின் மூலம் காருக்கு முறுக்கான தோற்றம் கிடைப்பதுடன், சிறப்பான ஏரோடைனமிக்சையும் வழங்கும். இந்த ஆக்சஸெரீஸ்கள் மூலம் அதிவேகத்திலும், வளைவுகளிலும் கார் சிறப்பான சமநிலையுடன் பயணிக்க உதவும் டவுன்ஃபோர்ஸ் விசையை வழங்கும்.

இதுவும் சிறப்பு

இதுவும் சிறப்பு

இந்த காரின் டிராக் கோஎஃபிசியன்ட் சிடி0.27 மட்டுமே. அதாவது, கார் வேகமாக செல்லும்போது பின்புறம் ஏற்படும் வெற்றிடம் மிக குறைவாக இருக்கும் என்பதால், அதிவேகத்தில் கார் செல்லும்போது பின்னோக்கி இழுக்கும் விசை குறைவாக இருக்கும்.

 அலாய் வீல்

அலாய் வீல்

நிசான் ஜிடி500 கார் போன்றே டிசைன் கொண்ட 6 ஸ்போக் அலாய் வீல்கள்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரெகாரோ சீட்

ரெகாரோ சீட்

இந்த காரில் கார்பன் ஃபைபர் முதுகெலும்பாக கொண்ட ரெகாரோ பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

 ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

3 ஸ்போக் அல்கான்ட்ரா கவர் கொண்ட ஸ்டீயரிங் வீல் ஓட்டுனருக்கு மிக மிருதுவான அனுபவத்தை கொடுக்கும்.

 சிறப்பு வசதி

சிறப்பு வசதி

ஓட்டுனர்களுக்கான சிறப்பு தகவல்களை அளிக்கும் வசதியும் இந்த காரில் இருக்கிறது.

வீடியோ

நர்பர்க்கிரிங் ஓடுதளத்தில் நிசான் ஜிடிஆர் நிஸ்மோ காரின் பெர்ஃபார்மென்சை சோதிப்பதற்காக எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வீடியோ.

Most Read Articles
English summary
The 2015 Nissan GT-R Nismo is officially here. The most performance oriented production Godzilla Nissan has ever built. So potent is the new Nismo tuned GT-R that it has achieved a Nurburgring lap time of 7:08.679. That's only 11 seconds slower than a Porsche 918 Spyder hypercar, which costs several times more.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X