பட்டியலுக்குள் இணைந்த புதிய பறக்கும் கார்: சோதனை வெற்றி

இப்போதைய நிலையில் டெர்ராஃப்யூஜியாவின் டிரான்சிஷன் பறக்கும் கார் உலக மக்களின் கனவை நனவாக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்த கட்டமாக டிரான்சிஷன் காரின் ஹைபிரிட் மாடலையும் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், வர்த்தக ரீயிலான தயாரிப்புக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் நிலை இருக்கிறது.

இந்த நிலையில், பறக்கும் கார் பட்டியலில் புதிய கார் இணைந்துள்ளது. ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த பொறியாளர் குழு ஏரோமொபில் 2.5 என்ற பெயரில் புதிய பறக்கும் கார் கான்செப்ட்டை உருவாக்கியுள்ளனர். டெர்ரஃபியூஜியாவின் டிரான்சிஷன் அளவுக்கு வடிவமைப்பு நிலையை எட்டவில்லையென்றாலும், இந்த புரொட்டோடைப் நிலையிலிருக்கும் பறக்கும் கார் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்ட இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம். இந்த காரின் செயல்படும் விதத்தை பார்க்க கடைசியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை காணத்தவறாதீர்.

கான்செப்ட்

கான்செப்ட்

கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பறக்கும் கார் முயற்சியில் மூன்றாவது கான்செப்ட்டாக ஏரோமொபில் 2.5 உருவாகியுள்ளது. சாலையில்செல்லும்போது இறக்கைகளை மடக்கிக் கொண்டு சாதாராண கார் போன்று ஓட்ட முடியும். பறக்கும்போது ஒரு சில வினாடிகளில் இறக்கையை விரிக்கச் செய்து பறக்க முடியும்.

 டிசைனர்

டிசைனர்

ஏரோமொபில் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை டிசைனருமான ஸ்டெபான் க்ளெய் கூறுகையில்," இந்த காரை உருவாக்கும் முயற்சிகளை 1990ம் ஆண்டு துவங்கியதாக கூறுகிறார். அதிலிருந்து டிசைன் பல்வேறு மாற்றங்களை கடந்து தற்போது இந்த கான்செப்ட் நிலையை எட்டியுள்ளதாக கூறுகிறார்.

தோற்றம்

தோற்றம்

ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்ற மிக நவீன டிசைனை கொண்டிருப்பதே இந்த கார் முக்கியத்துவம் பெற்றுள்ளதற்கு காரணமாக குறிப்பிடுகின்றனர்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டதாக காக்பிட் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் டிரைவர்/பைல்ட்டாக செயல்பட வேண்டியிருக்கும்.

ஃப்ரண்ட் வீல் டிரைவ்

ஃப்ரண்ட் வீல் டிரைவ்

ஏரோமொபில் 2.5 கார் முன்புற டிரைவ் சிஸ்டம் கொண்டது. முன்புறத்தில் இரண்டு சக்கரங்களும் பின்புற வால் பகுதியில் இரண்டு சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

 2 ஸ்டீயரிங் வீல்கள்

2 ஸ்டீயரிங் வீல்கள்

இந்த பறக்கும் காரில் 2 ஸ்டீயரிங் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய ஸ்டீயரிங் வீல் சாலையில் ஓட்டுவதற்கும், சிறிய ஸ்டீயரிங் வீல் பறக்கும் போது கட்டுப்படுத்துவதற்கும் உபயோகப்படுத்த வேண்டும்.

 கார்பன் ஃபைபர்

கார்பன் ஃபைபர்

ஸ்டீல் ஃப்ரேமில் கார்பன் ஃபைபர் பாடி கொண்டதாக கட்டமைக்கப்பட்டுளளது. இதனால், இந்த பறக்கும் காரின் எடை வெறும் 450 கிலோ என்பது விசேஷம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 100 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ரோட்டக்ஸ் 912 எஞ்சின் வால் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

எஞ்சின் செயல்பாடு

எஞ்சின் செயல்பாடு

சாலையில் செல்லும்போது வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் டிரைவ் சாஃப்ட் மூலம் முன் சக்கரங்களை இயக்கும். பறக்கும்போது பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புரொப்பல்லரை இயக்கும்.

வேகம்

வேகம்

இந்த கார் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்த கார் பறக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்திலும், சாலையில் மணிக்கு 160 கிமீ வேகத்திலும் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

மைலேஜ் மற்றும் ரேஞ்ச்

மைலேஜ் மற்றும் ரேஞ்ச்

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் பறக்கும்போது 700 கிமீ தூரத்திற்கும், சாலையில் கடந்தால் 500 கிமீ தூரமும் செல்ல முடியும் என்கின்றனர். தவிர, பறக்கும்போது லிட்டருக்கு 15 கிமீ மைலேஜையும், சாலையில் செல்லும்போது 13.3 கிமீ மைலேஜையும் தருமாம்.

வீடியோ

பறக்கும் காரின் சோதனை வீடியோ.

Most Read Articles
English summary
Not surprising, considering the Aeromobil 2.5 flying car is the creation of a Slovakian engineer who also happens to be an award winning designer. Aeromobil 2.5 has not reached the development stage the Terrafugia has achieved, but hopefully we'll have it on our roads in the future.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X