குறைவான விலையில் புதிய ஆடி ஏ4 ஸ்பெஷல் எடிசன் கார் அறிமுகம்

By Saravana

விற்பனையில் நம்பர் - 1 இடத்தை தக்க வைக்க அடுத்ததாக குறைவான மாடலை ஆடி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. க்யூ3 எஸ்யூவியின் குறைவான விலை கொண்ட க்யூ3 எஸ் என்ற மாடலை ஆடி சமீபத்தில் விற்பனைக்கு விட்டது.

இதைத்தொடர்ந்து, ஆடி ஏ4 காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதுவே தற்போது இந்தியாவில் ஆடியின் குறைந்த விலை செடான் காராகும். பொதுவாக, ஸ்பெஷல் எடிசன் மாடல்களில் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு மாறாக, இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஏ4 காரில் பல வசதிகள் பிடுங்கப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 500 ஸ்பெஷல் எடிசன் ஏ4 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

பிடுங்கப்பட்ட வசதிகள்

பிடுங்கப்பட்ட வசதிகள்

ஸினான் ப்ளஸ் ஹெட்லைட்டுகள், ரியர் வியூ கேமரா, கண்ணாடி கூரை, மரவேலைப்பாடுகள், பவர் ஃபோல்டிங் மிரர்கள் ஆகியவை இந்த காரில் இருக்காது. எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் கொண்ட இருக்கை வசதியும் இல்லை. மேலும், 17 இஞ்ச் அலாய் வீல்களுக்கு பதிலாக 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குறைந்த பவர்

குறைந்த பவர்

இவை மட்டுமில்லாது குறைந்த பவர் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான ஏ4 காரில் 177 பிஎச்பி ஆற்றல் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காரில் 143 பிஎச்பி ஆற்றல் கொண்ட 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210கிமீ என ஆடி கூறுகிறது. லிட்டருக்கு 16.55 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.25.99 லட்சம் விலையில் இந்த ஸ்பெஷல் எடிசன் ஆடி ஏ4 கார் விற்பனை செய்யப்படும்.

நம்பர் 1

நம்பர் 1

பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போட்டியை சமாளிக்கவும், நம்பர் - 1 என்ற அந்தஸ்தை தக்க வைக்கும் விதமாக இந்த குறைவான விலை கொண்ட காரை ஸ்பெஷல் மாடலாக ஆடி அறிமுகம் செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #audi #a4 #four wheeler #ஆடி #ஏ4
English summary
German luxury carmaker Audi has launched the A4 Celebration Edition in India with the price tag of Rs 25.99 lakh (ex-showroom). This limited edition loses out on features like a sunroof, 17-inch alloys, cruise control, electric wing mirrors, the wood trim on the dashboard and front passenger seat’s electronic adjustment function.
Story first published: Thursday, November 14, 2013, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X